இரண்டாம் உலகப் போர்

ஆசிரியர்: மருதன்

Category வரலாறு
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 328
ISBN978-81-8493-141-9
Weight350 grams
₹325.00 ₹292.50    You Save ₹32
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை, குரூரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப் போர். உயிரிழப்பு, அறுபது மில்லியன் முதல் எழுபது மில்லியன் வரை, போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என்று பரவி கிட்டத்தட்ட உலகம் முழுவதையும் உலுக்கியெடுத்தது.சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத் தற்காப்பு யுத்தம். சிலருக்கு பழிவாங்கல். சிலருக்கு விடுதலைப் போர். இன்னும் சிலருக்கு, இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம். ஹிட்லரோடு தொடங்கி ஹிட்லரோடு முடிந்துவிட்ட போர் அல்ல இது. திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல. மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, தெளிவாகத் திட்டமிடப்பட்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனம்.அரசாங்கங்கள் சரிந்தன. புதிய தேசங்கள் உருவாகின. உலக வரைபடம் மாறியது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இந்த ஆட்சி நீடித்திருக்கும் என்று சொன்ன ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து, அலசுகிறார் மருதன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மருதன் :

வரலாறு :

கிழக்கு பதிப்பகம் :