இரட்டைக்காப்பிய மகளிர்

ஆசிரியர்: திருவேணி

Category ஆய்வு நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 152
ISBN978-93-80218-84-7
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இலக்கிய வளம் நிறைந்த செந்தமிழ் மொழியில் ஐம்பெருங் காப்பியங்களாக மதிக்கப்பட்டவற்றுள் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் சிறப்புடையவை. இவை இரட்டைக் காப்பியம் என்றே அழைக்கப்பெறும். ஒன்றுக் கொன்று தொடர்பு உடையதாக இருப்பதாலும், சிலப்பதிகாரத்தில் மணிமேகலை யின் பிறப்பு பேசப்படினும், மணிமேகலையில் அவளுடைய அளப்பருஞ் சாதனைகள் தனியாகப் பேசப்படுவதால் அது காப்பியம் எனப்பட்டது என்பதாலும் இவை இரண்டும் இரட்டைக் காப்பியம் என ஒரு தன்மையதாக உணரப்பட்டன. இச் சீர்த்தித் தமிழுக்கே உரிய சிறப்புரிமை உடையது.
இரட்டைக் காப்பியத்தில் காணப்படும் பெண் பாத்திரங்களைப் பற்றி மட்டும் தனியாக ஆய்வு செய்துள்ளார் டாக்டர். வே. திருவேணி அவர்கள். பெண் பாத்திரங்களை வகைப்படுத்தி அரசு மகளிர், குலமகளிர், கணிகையர், துறவு மகளிர், பிற மகளிர் எனச் சிறப்புற அமைத்து ஆய்வு செய்துள்ளார். பெண் பாத்திரங்களின் பண்புகள் மிக விரிவாக ஆய்வு செய்யப் பட்டு செய்திகள் விடுபடாமல் இருகாப்பியங்களிலிருந்தும் நுண்ணிதின் தொகுக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
திருவேணி :

ஆய்வு நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :