இயற்கையின் சிரிப்பினிலே...

ஆசிரியர்: பால்ராஜ் வில்லியம்ஸ்,ச.ச.

Category
Publication அரும்பு பதிப்பகம்
FormatPaperPack
Pages 78
First EditionJan 2018
ISBN9788188038954
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

கவரப்பேட்டை, தொன் போஸ்கோவின் இறையியலகம், பெக்கி வளர்த்தெடுத்த இளம் எழுத்தாளர் வில்லியம், இறையியல் மற்றும் இலக்கிய கண்ணோட்டத்தில், இன்றைய நடப்புகளை அலசி, தீவிரமாகத் தமது கருத்துக்களைத் தந்துள்ளார். தமிழ்ப் பட்டப் படிப்பு, அவரில் எழுதும் திறமையைக் கொணர்ந்துள்ளது. விவிலியப் பார்வையில் இலக்கியக் கூறுகளை இணைத்து ஒரு சிறப்புச் சிந்தனையைத் தருகிறார் ஆசிரியர். அருட்பணி, பெல்லார்மின், ச.ச. தொன் போஸ்கோ இறையியலகத் தந்தை.இயற்கையைத் தன்னலக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல், 'இயற்கை இறைவனின் உன்னத படைப்பு: அதைப் பராமரிப்பது நமக்கு இறைவன் தரும் சவால் நிறைந்த அழைப்பு' என்பதை ஆசிரியர் தெளிவுப்படுத்துகிறார். இயற்கையில் இறைவனின் தோற்றத்தை, இருப்பை உணர்கிறோம்; அது நிறைவெய்துவது இறைவனில் சங்கமிக்கும்போதுதான் என்ற ஆழமான இறையியலை நமக்குப் படைக்கின்றார் அருட்பணி. பால்ராஜ் வில்லியம்ஸ். அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் சுவாமிக்கண்ணு, த.க யெருசலேம். இயற்கையில் இறையனுபவம் கொட்டிக்கிடக்கின்றன. திருவிவிலியத்திலும் திருச்சபை வழிமரபிலும் புதைந்து கிடக்கும் இயற்கை ஆன்மீகச் சிந்தனைகளை அள்ளி எடுத்து அதை ஒரு கோர்வையாகப் படைத்திருக்கிறார் வில்லியம்ஸ். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதையும், சுற்றுப்புறச் சூழல் பாதிப்பினால் இன்று தமிழகத்திலும், இந்தியாவிலும் ஏற்பட்டுள்ள சமூகப் பிரச்சனைகளையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். இந்த வித்தியாசமான முயற்சியைப் பாராட்டி பெருமைப்படுகிறேன். அருட்பணி. ஜான் அலெக்சாண்டர், ச.ச. தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர், இயற்கைமீது ஈடுபாடுள்ளவர்கள் யாரும் இந்நூலைப் பெரிதும் விரும்புவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆங்காங்கே சித்தர் பாடங்களையும் பாரதியாரின் கவிதைகளையும் தமது. கருத்துக்கு அரண்களாக அவர் காட்டிச் செல்வது பாராட்டுக்குரியது. மொத்தத்தில் இறையியல் துறையில் இந்நூல் புதுமையான, அருமையான நுழைவு என்பதை அரும்புப் பதிப்பகம் பதிவு செய்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :