இன்னொரு தேசிய கீதம்
₹100.00 ₹97.00 (3% OFF)

இன்னொரு தேசிய கீதம்

ஆசிரியர்: வைரமுத்து

Category கவிதைகள்
Publication சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்
FormatPaperback
Pages 135
Weight200 grams
₹100.00 ₹97.00    You Save ₹3
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நல்ல கவிதைகளை வாசிக்கவும் நேசிக்கவும் ஒரு தலைமுறை இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்தவர் வைரமுத்து, கவிதைகள் நமக்கானவை அல்ல என்னும் சாமானியர் களின் தயக்கத்தை வைரமுத்துவின் புதுக்கவிதைகள் முறித்துப் போட்டன. புரிகிறது; உணர்வுடன் கலக்கிறது; மயக்குகிறது; மிரட்டுகிறது; கெஞ்சுகிறது; கொஞ்சுகிறது இவர் கவிதை, கரும்பைப் போல் காதலைப் போல் கவிதையும் இனிக்கிறது. எனில், என்னாலும் கவிதை எழுத முடியுமே என்ற நம்பிக்கையை இன்னொரு தலை முறை இளைஞர்களுக்கு வழங்க இதோ புறப்பட்டிருக் கிறது வைரமுத்துவின் இன்னொரு தேசிய கீதம்.

எந்த ஒரு உயிருக்கும், பொருளுக்கும் 'கரு' ஒரு பிரதானமாக அமைகிறது.
இந்தக் கருவைக் கொண்டுதான் கதைகளும் கவிதைகளும், காவியங்களும் உரு கொள்கின்றன.
மறுதலிக்கப்பட்ட மானுட வாழ்க்கையின் சாரம்தான், என் எழுதுகோல் மகனின் உயிர் “மை”யின் சமனம் புத்தகப் பெண்ணின் தாள் வயிற்றில் கருவாகிறது.
கடலை கடக்கும் பறவைகள் கரையை அடையும் முயற்சியின் - வேதனையின் விளிம்பில் அவை அடையும் உடலின் ரணத்தையும், உள்ளத்து உருக்கத்தையும் பதிவு செய்யவே என் எழுதுகோல் பாய்மரமாகிறது.
வெயிலில், சுடும் மணலில் இந்த மண் புழுக்கள் படும் வேதனையைதான் விவரிக்கிறேன்.
கானங்கள் பாடும் கவிதைகளை விட கவலைகள் கூறும் கவிதைகளை நான் நேசிக்கிறேன்.
உங்கள், விழி வழி என் எண்ண த்தையும், ஏக்கக் கனவுகளையும் இறக்கி வைக்கிறேன்.
சுமை சுமக்கும் தோள்களின் சோர்வுக்கும்; கதிர் அறுக்கும் கரங்களின் ரணங்களுக்கும் சில ஒப்பாரிக் கவிதைகள் ஒத்தடம் இடுமா? நம்பிக்கையில் நான்.
-த. அருள் நாதன்


உங்கள் கருத்துக்களை பகிர :
வைரமுத்து :

கவிதைகள் :

சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் :