இன்னூல்

ஆசிரியர்: வடிவேலனார்

Category கல்வி
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 84
Weight100 grams
₹30.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இலக்கணம் என்பது தமிழ்மொழியின் வரப்பு; வேலி. இலக்கணம் வரப்பாக அமைந்து, மொழியின் எல்லையை நமக்கு வரையறுத்துக் காட்டுகிறது. இலக்கணம் வேலியாக நின்று, வேற்றுமொழி வந்து தமிழ்மொழியை மேய்ந்துவிடாதபடி காத்து நிற்கின்றது. அந்த வரப்பை - வேலியை முதன் முதலில் அமைத்தவர் ஒல்காப் புகழ்மிக்க தொல்காப்பியரே. அதற்கடுத்து நன்னூலார் அமைத்தார். அடுத்துப் புலவர் குழந்தை “இன்னூல்” என்று எழுதி அமைத்தார்.
தொல்காப்பியத்திற்கு - இளம்பூரணர் முதலாகப் பலர் உரை வரைந்தனர். நன்னூலுக்கு மயிலைநாதர் முதலாகப் பலர் உரை வரைந்தனர். “இன்னூ”லுக்குப் புலவர் வடிவேலனார் முதலாவதாக உரை வரைந்துள்ளார். இன்னூல் என்னும் இலக்கண நூலை அறிந்து கொள்ளவும் - இலக்கணப் பொருளை அறிந்து கொள்ளவும் - எளிய தமிழில் அரிய எடுத்துக்காட்டுகளுடன் இந்நூலைத் தந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கல்வி :

கௌரா பதிப்பக குழுமம் :