இனி என்றும் இனிமையே

ஆசிரியர்: தங்கவேலு மாரிமுத்து

Category பொது நூல்கள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 104
ISBN978-81-8446-071-6
Weight100 grams
₹55.00 ₹51.70    You Save ₹3
(6% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நாம் எதற்காகப் பிறந்தோம்? தெரியாது. எதைத் தேடுகிறோம்? தெரியும். சந்தோஷத்தைத் தேடுகிறோம். ஆனால் துன்பங்களோ, நம்மைத் தேடி வருகின்றன, நம்மைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. வாழ்க்கை முழுவதும் இதுதான் நடக்கிறது. துன்பங்கள் நம்மைத் துரத்த, நாம் இன்பங்களைத் துரத்த.... இடைவிடாத இந்த ஓட்டத்தில், நாம் இன்பங்களைத் தொடும் போதெல்லாம் வாழ்வில் இனிமை நிலவுகிறது. துன்பங்கள் நம்மைப் தொடும் போதெல்லாம் வாழ்வில் வெறுமை வந்து விடுகிறது.
துன்பங்களைத் துரத்துகிறேன் என்று, அதில் தீவிரம் காட்டி, இருக்கிற ஒன்றிரண்டு இன்பங்களையும் ஏன் ஒதுக்க வேண்டும்?. அந்த இனிமைகளை ஏன் மறுக்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு விடைகாணப் புறப் பட்ட என் சிந்தனைகளின் வெளிப்பாடுதான் இந்த நூல்.
துன்பங்களை மீறியும் துன்பங்களுக்கிடையேயும், இன்பங்களைக் காணவேண்டிய அவசியத்தையும், அவற்றைக் கண்டுபிடிக்கும் ரகசியத்தையும், முடிந்த வரையில், எளிய நடையில் தந்திருக்கிறேன். எனது கருத்துக்கள் உங்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக அமையும் என்று நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தங்கவேலு மாரிமுத்து :

பொது நூல்கள் :

விஜயா பதிப்பகம் :