இனிய இலக்கியம்

ஆசிரியர்: திருவேணி

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 168
ISBN978-93-80218-72-4
Weight200 grams
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழகத்திற்கு பலவகைச் சிறப்புகள் உண்டு. அவற்றுள் நம் தமிழ்நாட்டில், வானளாவிய, ஓங்கி உயர்ந்த, பழமையும், பெருமையும், வாய்ந்தவை வரலாற்றுச் சிறப்புமிக்க, வளம் நிறைந்த கோயில்கள் ஆகும். வெளிநாட்டினரின் உள்ளங்களைக் கவர்ந்த அற்புதச் சிற்பங்கள் நம்நாட்டின் நாகரிகத்தினையும் பண்பாட்டையும் விளக்குவதோடு மட்டுமல்லாமல், கல்வி வளர்ச்சிக்கும் கோயில்கள் பெருந்தொண்டு புரிந்துள்ளன. தமிழகக் கோயில்களின் கட்டிடக்கலை பற்றியும், சோழர்காலம், 'தமிழகக் கோயில்கலை வரலாற்றின் பொற்காலம்' என்பதை உணர்த்தும் வகையில் 'இனிய இலக்கியம்' என்ற இந்த இனிய நூலில் முதல் கட்டுரையாகக் 'கோயில்கள்' என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரைகள் முறையே சங்க நூல்கள் பற்றியும், அறநூல்கள், இரட்டைக் காப்பியங்கள், தமிழிசை பற்றியும் விளக்கம் பெறுகின்றன. நூல்கள் எழுதுவோரை ஊக்கப்படுத்தி, வாழ்த்தி வழிநடத்தும் அழகப்பா பல்கலைக் கழக மாண்பமை. துணைவேந்தர் பேரா. சேது சுடலைமுத்து அவர்களுக்கும், பதிவாளர் கா. மணிமேகலை அவர்களுக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் என் கனிவுகூர்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.

-டாக்டர். வெ. திருவேணி.

உங்கள் கருத்துக்களை பகிர :
திருவேணி :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :