இந்த நாள் இனிய நாள்

ஆசிரியர்: சுகி சிவம்

Category தத்துவம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 160
First EditionNov 2006
17th EditionAug 2017
ISBN978-81-8345-038-6
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereசென்னையில் இருந்து பிராங்ஃபர்ட் சென்றடைந்து. அமெரிக்க விமான மாறுதலுக்காகக் காலம் கடத்திக் களைத்திருந்த என்னை ஒரு குரல் உரிமையுடன் உலுப்பியது. “ஐயா வாருங்கோ ... ஒரு கோபி சாப்பிடுவோம்” என்று. அந்நிய நாட்டு விமான நிலையத்தில் எனக்குக் காஃபி தரும்படியான உறவு அந்த இலங்கைத் தமிழர்க்கு எதனால் ஏற்பட்டது. என் ‘இந்த நாள் இனிய நாள்' நிகழ்ச்சி தந்த நெருக்கம் அல்லவா கொஞ்சம் தயங்கிய என்னை , “ஐயா நீங்கள் நம்ப குடும்பத்தில் ஒருவர். நானும் அம்மாளும் (wife) சண்டை போட்டால் கூட 'ஐயா சொன்னாரே அதுமாதிரி' என்று உங்களைத்தான் மேற்கோள் காட்டி சண்டை போடுவோம். இருங்கள். உங்களைக் கண்டன் என்று சொன்னால் அவர் கோவப்படுவார். ஒரு கால் எடுக்கறேன். பேசுங்கோ ...” என்றபடி அவர் மனைவியுடன் தொலைபேசி வழி தொடர்பு ஏற்படுத்தி என் கையிலும் செல்ஃபோனைத் திணித்து விட்டார். எதிர் முனையில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே... பல வருஷம் பழகிய பாசத்துடன் பேசுகிறார் அந்த அம்மணி. இவை யாவும் சன் தொலைக்காட்சி எனக்குக் கொடுத்த பாசபந்தங்கள். என் “இந்த நாள் இனிய நாள்' நிகழ்ச்சி மூலம் பல குடும்பங்களின் உறவுக்காரனாகி இருக்கிறேன் என்று சொல்லலாம். என் எண்ணங்களை வான் வழி வண்ணங்களாக்கி வெளிச்சப்படுத்திய சன் தொலைக்காட்சிக்கு என் இதயமார்ந்த நன்றியைத் தெரிவிக்க வேண்டும். என்ன பேச வேண்டும், எதைப் பற்றி பேச வேண்டும் என்பது பற்றியெல்லாம் எனக்குச் சகல சுதந்திரமும் வழங்கியுள்ள அவர்களது அன்பிற்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும்.

இந்த நாள் இனிய நாள்...! 24 கட்டுரைகள் அடங்கிய ஓர் அறிவுப் பெட்டகம்! அறிவுக்கு வேலை கொடுப்பவர்களுக்கு இந்நூல் ஓர் அருமையான 'டானிக்'! ஆற்றலுடன் செயல்பட நினைப்பவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டி! பெட்டகத்தைத் திறந்திடுங்கள்... இவ்வழிகாட்டியின் துணை கொண்டு ஆற்றலுடன் செயல்படுங்கள். S.Com வாழ்த்துகள்! “சன் தொலைக்காட்சியில் விடுமுறை நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இனிய நிகழ்வாக சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களின் சொல்லமுதைச் செவிகுளிரக் கேட்டு பார்த்து ரசித்த என்போன்ற ஆயிரக்கணக்கான அன்பு வாசகர்களின் வாசிப்பு' ஆர்வத்திற்கு ஏதுவாக நூலாக வெளியிட வாய்ப்பளித்துள்ள ஆசிரியருக்கு இதயங்கனிந்த நன்றி.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

தத்துவம் :

கவிதா பதிப்பகம் :