இந்து தேசியம்

ஆசிரியர்: தொ. பரமசிவன்

Category கட்டுரைகள்
Publication கலப்பை
FormatPaper Back
Pages 144
ISBN978-81-922436-2-7
Weight150 grams
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபேராசிரியர் தொ.பரமசிவன் எழுதி ஏற்கெனவே வெளிவந்த 'நான் இந்துவல்ல நீங்கள்? இந்து தேசியம் , 'சங்கரமடம்; தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்', 'இதுதான் பார்ப்பனியம்', 'புனா ஒப்பந்தம்; ஒரு சோகக் கதை' ஆகிய ஐந்து குறு நூல்கள் கொளத்தூர் மணி அணிந்துரையுடன் இந்து தேசியம் என்னும் பெயரில் ஒரே நூலாக வடிவம் பெற்றதே இந்நூல்.

சிவக்குமரன் என்கிற புனைப்பெயரில் தொ.பரமசிவன், அவர்களால் எழுதப்பட்ட நான் இந்துவல்ல நீங்கள்..?, 'இந்து' தேசியம், சங்கர மடம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள், இதுதான் பார்ப்பனியம், புனா ஒப்பந்தம் - ஒரு சோகக் கதை ஆகிய நூல்கள் சிறு வெளியீடுகளாக யாதுமாகி பதிப்பகத்தால் (லேனா குமார்) முதலில் வெளியிடப்பட்டது. பின்னர், மணி பதிப்பகம் தொ.பரமசிவன் என்ற பெயரிலேயே நான் இந்துவல்ல நீங்கள்..? இந்து தேசியம், இதுதான் பார்ப்பனியம் ஆகிய நூல்களை மீண்டும் வெளியிட்டது. தற்போது கலப்பை பதிப்பகம் இவை அனைத்தையும் சேர்த்து 'இந்து' தேசியம் என்ற தலைப்பில் ஒரே நூலாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி அவர்களின் அணிந்துரையோடு வெளியிடுகிறது. பின்னிணைப்பாக கலப்பை பதிப்பகம் ஏற்கெனவே வெளியிட்ட தொ.பரமசிவனின் 'உரைகல்' நூலுக்கு ந.முருகேசபாண்டியன் அவர்கள் 'இந்தியா டுடே' இதழில் எழுதிய மதிப்புரை இணைக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு மனிதரின் வாழ்வும், அவரது உழைப்பு, வாய்ப்பு. ஆற்றல், அறிவு, அவர் பேணும் அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைகிறது. என்றாலும், வாழ்க்கைப் போக்கை அவர்கள் அறியாமலே தாம் விரும்பும் திசைவழியில் செலுத்தும் ஆற்றல் அரசுக்கும், அரசாங்கத்துக்கும்கூட உண்டு. ஜனநாயக அடிப்படையில் அமையும் அரசாங்கம்கூட அறுதிப் பெரும்பான்மையோடு அமையும்போது பெரும்பான்மைவாத அராஜகம் பல நேரங்களில் தலைத்தூக்கத்தான் செய்கிறது. ஆட்சியில் அமர்ந்தோர் காட்டாறு போல தங்கள் அதிகாரத்தை செலுத்த முற்படும்போது, அது செல்லும் வழியில் உள்ள உதிர்ந்த சருகுகளை, கிடக்கும் கழிவுகளை மட்டுமின்றி, பயன்படும் மரங்களையும், மண்ணையும் அடித்துச் செல்லும்; விளைநிலங்களை நாசமாக்கிச் செல்வதுமுண்டு. இப்போது இந்தியாவில் ஆட்சிக்கு வந்தமர்ந்துவிட்ட இந்து வெறி, கார்ப்பரேட்' ஆதரவு பா.ஜ.க அரசும் அப்படித்தான். அது இப்போது விட்டால் எப்போதும் செய்ய முடியாது என்ற சிந்தனையுடன் வெறித்தனமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பெருமையாகக் கூறிக்கொள்ளப்படும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது முழுதும் உண்மையானது அல்ல எனினும் இயல்பில் ஒன்றிவிட்ட ஒற்றுமையையும்கூட சிதைத்து வேற்றுமைப்படுத்துவதில் உறுதியாக நிற்கிறது. பன்முகத் தன்மை என்பதை அழித்து ஒற்றைக் கலாச்சாரம், இந்து கலாச்சாரத்தை அவர்கள் முன்வைக்கும் பண்பாட்டுத் தேசியத்தை - நிலைநாட்டத் துடிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
தொ. பரமசிவன் :

கட்டுரைகள் :

கலப்பை :