இந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள்

ஆசிரியர்: சா.அனந்தகுமார்

Category பொது அறிவு
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 100
First EditionApr 2009
1st EditionSep 2019
ISBN978-93-8089-244
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹85.00 $3.75    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகின் பல்வேறு பகுதியிலும், நாடுகளிலும் மனிதர்கள் நாகரிகத்திலும், அறிவிலும் வளர்ச்சியடைந்துகொண்டிருந்தபோது, நமது நாடு அறிவியலிலும், செல்வத்திலும் சிறந்திருந்தது. இந்தியர்கள் பலவகை கப்பல்களை உருவாக்கி கடல்தாண்டி பல்வேறு நாடுகளுக்குச் சென்றனர். பல நூற்றாண்டுகட்கு முன்பேயே இந்தியாவில் தோன்றிய வராஹமிகிரர், பாஸ்கரர், கணநாதர், தன்வந்திரி உட்பட பலர் கணிதம், வானவியல், மருத்துவம், அறிவியலில் சிறந்திருந்தனர். கோள் அமைப்பு, நட்சத்திர இயக்கம், புவிஈர்ப்பு விசை, பிளாஸ்டிக் சர்ஜரி, மருத்துவக் கருவிகள் எனப் பல்துறைகளில் சிறப்புற்று, நூல்கள் எழுதினர். ஆனால் இடைக்காலத்தில் இந்த வரலாற்று உண்மை மறைக்கப்பட்டது. அறிவியலுக்கு சொந்தக்காரர்கள் ஐரோப்பியர்களே என்ற எண்ணம் உறுதிப் பெற்றது. எனினும் சுஸ்ருத சம்ஹிதை, ஆரிய பட்டீயம் போன்ற நூல்களைப் பார்த்த இன்றைய உலக விஞ்ஞானிகள் இந்தியரின் அறிவியல் அறிவு குறித்து வியந்து நிற்கின்றனர். அமெரிக்காவிலுள்ள நாசா - விண்வெளி ஆய்வு நிலையத்தில் இந்திய வானியல் மேதை பாஸ்கரா-வின் உருவப்படம் பதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி திப்பு சுல்தான் போரில் ராக்கெட்டைப் பயன்படுத்திய போர்க்காட்சியும் பொறிக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்திய விஞ்ஞானிகள் உலகம் ழுமுவதும் பல்துறைகளில் இடம் பெற்று அந்நாட்டை அறிவியல் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் உயர்த்தி வருகின்றனர்.
இந்நூலில் இந்திய விஞ்ஞானிகளின் சிறப்பு, பிறப்பு, மறைவு, சாதனைகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், பெருமைகள் உட்பட பல விவரங்கள் கேள்வி-பதில்கள் வடிவில் தரப்பட்டுள்ளன, மாணாக்கர்க்கும், பொது அறிவு ஆர்வலர்களுக்கும் இந்நூல் உதவிடும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சா.அனந்தகுமார் :

பொது அறிவு :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :