இதோ ஒரு இதயம்

ஆசிரியர்: லக்ஷ்மி

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 240
First EditionJan 1979
9th EditionMar 2016
Weight200 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
₹115.00 ₹109.25    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
அதிகாலை ஆறு மணி. "மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்" திருச்சி சந்திப்பு நிலையத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. சன்னல் வழியே அவன் பார்த்தான். இரண்டு நாட்களாகப் பெய்த மழை ஓய்ந்து, கீழ்வானம் சிவந்து கொண்டு வந்தது. அவனுக்கு உற்சாகம் பிடிபடவில்லை .
"பவளமேடு என்பது திருச்சிக்குச் சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் சேலம் செல்லும் பாதையில் காவேரிக் கரையை ஒட்டிய அமைதியும், செழுமையும் நிறைந்த ஒரு கிராமம். தங்களுக்குக் கட்டாயம் பிடிக்கும் என நம்புகிறோம். ஆஸ்பத்திரிக் கட்டடத்தைத் திறந்து வைத்துத் தங்களையும் வரவேற்று, தலைமை தாங்குவதற்குக் கொடை வள்ளல் சதானந்தன் அன்புடன் இசைந்திருக்கிறார். தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வீடு எல்லா வசதிகளுடனும் தங்கள் வரவை எதிர்நோக்கி உள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பஸ் நிலையத்தில் உள்ள வெற்றிலை பாக்குக் கடையருகே தங்களைச் சந்திக்க தணிகாசலம் வந்திருப்பான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
லக்ஷ்மி :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :