இது மடத்துக்குளத்து மீனு
ஆசிரியர்:
ஜே. ஷாஜஹான்
விலை ரூ.215
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81?id=1608-6217-8969-3714
{1608-6217-8969-3714 [{புத்தகம் பற்றி கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். ஷாஜஹான் கற்றவர் மட்டுமல்ல. அடிப்படையில் நல்லவர். கற்றவரை விடவும் அதிக சிறப்புக்குரியோர் நல்லோரே. ஷாஜஹான் மடத்துக்குளத்தில் தொடங்கி, சென்னை, டெல்லி என்று முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு சூழல்களில் சென்று வாழ்ந்திருப்பவர். சொந்த மண்ணை விட்டு வேறு இடங்களில் வாழ நேர்ந்தவர்கள் தாய்மண்ணின் பிரிவால் நொந்திருந்தால் பெரிதும் சுயபரிதாபத்திலோ, அல்லது புதிய பூமியின் பரவசத்தில் ஆழ்ந்திருந்தால் வேர்களிலிருந்து அந்நியப்பட்டோ, அல்லது எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி சுருங்கிய தன் வீடு தன் குடும்பம் தன் வேலை என்ற வட்டத்திலோ அமிழ்ந்துவிடுவதே இயல்பு. ஷாஜஹான் இந்த மூன்று போக்குகளிலிருந்தும் மாறு பட்டிருக்கிறார்.
<br/>இந்தத் தொகுப்பில் ஷாஜஹான் பதிவு செய்திருக்கும் ஒவ்வொரு நினைவலையும் இவற்றை நிரூபிக்கிறது. ஓவ்வொன்றும் தனி மனித அனுபவங்களாக சொல்லப்பட்ட போதும், அவை நம் எல்லாருக்குமானவையாகவே இருக்கின்றன. ஷாஜஹானின் ரசனை மனம் நம்மையும் தொற்றுகிறது. ஆனால் துல்லியமான விவரங்களின் மூலம் ரசனைக்கு அடர்த்தியான தீனி போடுவதுடன் ஷாஜஹானின் பேனா நிற்பதில்லை. எல்லா பதிவுகளிலும் அடிநாதமாக இழையோடுவது ஷாஜஹானின் மனிதம்தான். சக மனிதர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதான அன்பு, அக்கறை ஒவ்வொரு பக்கத்திலும் தொனிக்கிறது. அவருடைய அரசியல், அவருடைய கலை இலக்கிய முயற்சிகள் எல்லாவற்றிற்கும் அடிப்படை இந்த அன்பும் அக்கறையும்தான்.
<br/>- ஞாநி
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866