இதுவரை நான் (சுயசரிதை)

ஆசிரியர்: வைரமுத்து

Category சுயசரிதை
Publication சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்
FormatPaperback
Pages 280
Weight350 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇப்போது ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் அவர்கள் தங்கள் பார்வைகளில் பரிமாறிக் கொண்டதைக் கவனித்தேன்.
தன் உதவியாளரிடம், “வைரமுத்துவின் முகவரியை வாங்கி வைத்துக் கொள்ளப்பா” என்று சொல்லிவிட்டு திரு.இளையராஜா விடைபெற்றுச் சென்றார்.
எல்லோரும் சென்ற பிறகு திரு. பாரதிராஜாவும், நானும், நண்பர் வடுகநாதனும் மட்டும் அந்த அறையிலிருந்தோம்.
“இவன் இதுவரைக்கும் எவன் முகவரியையும் வாங்கி வைத்துக்கொள்ளச் சொன்னதில்லை. இன்று முதல் உங்களுக்கொரு புதிய எதிர்காலம்” என்று அன்போடு அணைத்துக் கொண்டார். திரு. பாரதிராஜா.
தன் பையிலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டுக்கள் கொண்ட ஒரு கட்டை எடுத்து என்னிடம் நீட்டினார். நான் எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன். கடைசியில் ஒரே ஓர் ஐம்பது ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டேன். காரில் வரும்போது அவர் “பொன்மாலைப் பொழுது'' பாடலைப் பாடிக்கொண்டே வந்தார். இந்த உலகமே எனக்கு இனிப்பாகி விட்டது…

உங்கள் கருத்துக்களை பகிர :
வைரமுத்து :

சுயசரிதை :

சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் :