இதய நோய்களுக்கான மருந்துகளும், பயன்படுத்தும் முறைகளும்

ஆசிரியர்: டாக்டர் சு.முத்துசெல்லக்குமார்

Category உடல்நலம், மருத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 168
Weight150 grams
₹50.00 ₹47.00    You Save ₹3
(6% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனிதனுக்கு எத்தனையோ நோய்கள் ஏற்பட்டாலும், இவற்றிற்கெல்லாம் தலைவராக விளங்கும் நோய் 'இதய நோய்கள் 'தான்! அதேபோல, மக்கள் எத்தனையோ காரணங்களால் இறந்தாலும்கூட இவர்களின் பெரும்பாலான இறப்பிற்குக் காரணமாக இருப்பது 'மாரடைப்பு தான். வயது முதிர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், 'மாரடைப்பு தான் இவர்களது வாழ்விற்கு ஒரு முற்றுப் புள்ளியை வைத்துச் செல்கிறது. இதை நீங்கள் அன்றாடம் செய்தித்தாள்களில் பார்க்கலாம். ஆக, 'இதயம்' என்பது உடலில் மிகவும் முக்கியமானது. இதனால்தான் எந்தத் துறையாக இருந்தாலும் அதில் முக்கியமானவர்களை அதன் 'இதயம்' போன்றவர் என்று குறிப்பிடுகிறார்கள். மேலும், இதயம் ஓய்வின்றி தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும் உறுப்பாகும். உடலுக்குத் தேவையான சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் இரத்தத்தின் மூலம் பெற உதவும் உறுப்பாகும். இதயம் இடைவிடாமல் இயங்குவதால்தான் இரத்தம் உடலெங்கும் பரவி உறுப்புகளை அடைகிறது. உடலில் எல்லா வேலைகளும் நடைபெறுகிறது. எனவே, இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற 'இதயம்' நோய்களினால் பாதிக்கப்படும்போது, நோயாளி அவதிப்படுவது மட்டுமல்ல, இறப்பிற்கு மிக அருகாமையில் சென்று விடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். எனவே, 'இதய நோய்களை' சாதாரணமாகக் கருத முடியாது. அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும், சிகிச்சை செய்ய வேண்டும். அப்போது தான் நோயாளி குணமடைய வாய்ப்புகள் ஏற்படும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் சு.முத்துசெல்லக்குமார் :

உடல்நலம், மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :