இதயமே...இதயமே...

ஆசிரியர்: ஜி எஸ் எஸ்

Category
Publication சூரியன் பதிப்பகம்
Pages 4
$3.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தலைமுடி தொடங்கி கால் விரல் நகம் வரை நம் உடலில் எல்லா உறுப்புகளுமே அத்தியாவசியம்தான். இல்லாவிட்டால் இயற்கை எதற்கு இவற்றை உடலில் சேர்த்திருக்கப் போகிறது. எந்த உறுப்பு தன் இயல்பில் தவறினாலும் பிரச்னைதான். ஆனால், எல்லாவற்றையும்விட மேலானது இதயம். அது நம் உடலின் மெயின் ஸ்விட்ச்!இதயம் காதலின் அடையாளமாக சிலருக்கு இருக்கலாம்; ஆனால் எல்லோருக்கும் அது உயிரின் அடையாளம். சுமார் 300 கிராம் எடையில், ஒரு கைப்பிடி சைஸில் இருக்கும்.amp;nbsp;இதயம் இயங்கினால்தான் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும். அதன் ‘லப் டப்’ ஓசை கேட்காவிட்டால் மரணம் நிச்சயம். இரக்கமற்று பாவங்கள் செய்பவர்களை ‘இதயமே இல்லாதவன்’ எனத் திட்டுவதும், ஒரு நகரத்தின் பிஸியான பகுதியை ‘இதயம் போன்ற ஏரியா’ என அழைப்பதும் இதனால்தான். இதய ஓட்டையில் தொடங்கி, படபடப்பு, அடைப்பு, செயலிழப்பு, மாரடைப்பு என இதயத்துக்கு ஏற்படும் எல்லா பிரச்னைகள் பற்றியும், அவற்றின் அறிகுறிகள், சமாளிக்கும் விதங்கள், தற்காப்பு வழிகள், சிகிச்சை என எல்லாவற்றையும் எளிமையாக விளக்கும் இதய என்சைக்ளோபீடியா இது!.

உங்கள் கருத்துக்களை பகிர :