இண்டமுள்ளு

ஆசிரியர்: அரசன்

Category கதைகள்
Publication ஜீவா படைப்பகம்
FormatPaper Pack
Pages 112
First EditionDec 2018
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$8.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

அரசனின் மொழி அரியலூருக்கும் சொந்தமான புழங்குமொழி, நீட்டி இழுக்கிற வார்த்தைகளில் மண்ணின் உயிரை அறுவடை செய்கிற அடர்த்தியான மொழி. காய்ந்த கள்ளியில் பழம் பழுத்துக் கிடக்கிற மாதிரியான ருசியான சொலவடைகளோடு கூடிய மொழி. அவரது கதைத்தன்மைகள் ஈரமும் துயரமும் அப்பட்டமான உண்மையுமானது. மனிதர்களோடு இயங்குவதின் ஊடே மண்ணின் வாழ்நிலையைப் பெருமையோடு பதியும் குணாதிசயம் கொண்டது.
“இண்ட முள்ளு” வாசிக்கும்போது நான் அந்த நிலத்தின் காற்றை சுவாசித்துக் கிடந்தேன். உகந்த நாயகன் குடிக்காட்டின் சுனைத் தண்ணீரின் ருசி உள்ளங்கைக்குள் வழிந்து ஓடுகிறது. உழைத்து உழைத்து கட்டிபிடித்துப் போன அந்தக் கைகளை வீசி நடக்கிற மனிதர்களை, அவர்கள் வாழ்க்கைப் பாடுகளை, அவரது வயல்நிலங்களின் உழவுகளை, சாக்குப்போக்கு பார்க்காமல் காடுகரையெல்லாம் அலைந்து மேய்க்கிற அவர்கள் கால்நடைகளை, கபடங்களை, பொல்லாப்புகளை, இன்னுமென்னென்ன உண்டோ அத்தனையின் சொச்சத்தை ஒன்பது கதைகளின் வழியாகப் பதிவு செய்திருக்கிறார் அரசன்.

உங்கள் கருத்துக்களை பகிர :