இணையான பழமொழிகள்

ஆசிரியர்: முத்துக்குமரன்

Category கல்வி
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 152
Weight150 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பழமொழிகள் ஒரு சமூகத்தின் பண்பாட்டை விளக்குவதாகவும். பண்பட்டு வாழ்ந்த வாழ்க்கையின் சாரமாகவும் விளங்குவன பழமொழிகளே. இப்பழமொழிகளைக் கொண்டே மொழியின் வளத்தை, மக்களின் பண்பாட்டை, வாழ்க்கை நடைமுறைகளை அறிய முடியும். இதில் நம் முன்னோர்கள் முன்னிலை வகித்தனர் என்றால் அது மிகையாகாது. நம் முன்னோர்கள் ஆக்கிச் சென்ற செய்யுள் நூல்களிலும், பிற்காலப் கவர்கள் ஆக்கிச் சென்ற உரைநடை நூல்களிலும் எண்ணற்ற பழமொழிகள் அழகுமிளிர அமைந்துள்ளன. இவ்வகையில் பழமொழிகளை அமைத்துப் பல நூல்களை அமைத்தனர். பழமொழி நானூறு, பழமொழி விளக்கம் முதலிய நூல்கள் இவ்வகையில் வெளிவந்தனவேயாகும். உலக மொழிகளில் உள்ள பழமொழிகளைவிட நம் தமிழில் பழமொழிகள் மிகவும் அதிகமாக உள்ளன. இவற்றைத் தொகுத்து நம் முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்றுள்ளனர்.
பல மேனாட்டு அறிஞர்கள் நம் பழமொழிகளைக் கற்றுத் தேர்ந்து அதில் உள்ள சுவையினை உணர்ந்து அவைகளைத் தொகுத்தனர். அத்துடன் அவற்றிற்கு இணையாகத் தம் மொழிகளில் உள்ள பழமொழிகளையும் சேர்த்து பழமொழித் திரட்டாகப் பல நூல்களை வெளியிட்டனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
முத்துக்குமரன் :

கல்வி :

சங்கர் பதிப்பகம் :