இக்காலத் தமிழ் இலக்கணம்
ஆசிரியர்:
பொற்கோ
விலை ரூ.300
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D++%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?id=1045-9714-3613-4087
{1045-9714-3613-4087 [{புத்தகம் பற்றி இக்காலத் தமிழுக்கு ஒரு நல்ல இலக்கணம் வேண்டும். இந்தக் கருத்து இப்போது பரவலாகச் சரியாக உணரப்பட்டிருக்கிறது. நல்ல அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பிறகு நம்மிடம் வளர்ந்த மொழி உணர்ச்சியும் கல்வி உலகில் ஏற்பட்ட ஆராய்ச்சி வளர்ச்சியும் புதிய சிந்தனைகளைத் தூண்டி மொழியின் பயன்பாட்டு எல்லையை விரிவாக்கிப் புதிய இலக்கணத்தின் தோற்றத்திற்கு வழி வகுத்திருக்கிறது. இத்தகைய சூழலில் புதிய இலக்கணங்கள் தோன்ற வேண்டும். அப்போதுதான் மொழியில் தோன்றியுள்ள புதிய இலக்கணக் கூறுகளுக்கு நிலைபேறு ஏற்படும். மொழியிலும் அப்போதுதான் புதிய வளர்ச்சி தோன்றும்.
<br/>இப்போது உங்கள் கைகளில் தவழும் இந்த இலக்கண நூல் தமிழ் மரபைப் போற்றி எழுதப்பட்ட இலக்கண நூல், தேவையான பழைமைகளைப் போற்றிக் காப்பதோடு மொழியில் தோன்றியுள்ள - புதுமைக் கூறுகளுக்கு இடம் தந்து வாழ்வளிப்பதையும் இந்த இலக்கண நூல் ஒரு நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மரபில் கால் ஊன்றிப் புதுமையில் அடியெடுத்து வைக்க இந்த நூல் வழிகாட்டுகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866