இக்காலத் தமிழ் மரபு

ஆசிரியர்: கு.பரமசிவம்

Category இலக்கியம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 282
ISBN978-81-7720-162-8
Weight250 grams
₹230.00 ₹223.10    You Save ₹6
(3% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




இளம்பருவம் முதலாகவே எனக்குத் தமிழ்மீது தணியாத ஆர்வம். இந்த ஆர்வத்தைத் தூண்டியவர்கள் எனக்கு ஆசிரியர்களாக அமைந்த தமிழ்ச் சான்றோர்களே. வித்துவான்கள் கிருஷ்ணய்யர் (வீரவ நல்லூர், இந்து நடுநிலைப் பள்ளி), ந. சேதுரகுநாதன், மு. முத்தணைந்த பெருமாள் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கலாசாலை), பேராசிரியர் ச. கணபதி முதலியார் (திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரி) முதலியவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். என் தமிழார்வத்தை ஆராய்ச்சி நெறியில் திருப்பிவிட்ட பேராசிரியர்கள் வ.ஐ. சுப்பிரமணியம் (திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி), டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), டாக்டர் முத்துச்சண்முகனார் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) ஆகியோரை நான் மறக்கவே முடியாது. (இப்பெருந்தகைகளில் இருவர் இப்போது இல்லை. ஏனையோர் ஓய்வு பெற்றுவிட்டனர்; அல்லது வேறு பொறுப்புகளில் உள்ள னர்).
மொழியியலைக் கற்றபோதும் அயல் நாட்டவருக்குத் தமிழைக் கற்பித்து வந்தபோதும் தமிழ்மொழியின் அமைப்புப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினேன். மொழியியல் கல்வி எனக்கு ஒரு புதுப் பார்வையைத் தந்தது. அயல்நாட்டு மாணவர்கள் எழுப்பிய கேள்விகள் என் சிந்தனையை ஆழப்படுத்தின. அந்தப் புதுப்பார்வையும் சிந்தனை ஆழமுமே 1977 முதல் நான் 'இக்காலத் தமிழ் மரபி'னை ஒரு பாடமாக அயல் நாட்டவர்க்குக் கற்பிக்குமாறு தூண்டின. 1978இல் அமெரிக்கன் கல்லூரி தன்னாட்சி பெற்றபோது பி.ஏ., தமிழிலக்கிய மாணவர்களுக்கும் 'இக்காலத் தமிழ் மரபு' பாடமாயிற்று. மாணவர்களின் ஆர்வமும் கேள்விகளும் என் சிந்தனை மேலும் நுட்பம் பெற உதவின. அதன் விளைவுதான் இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கு.பரமசிவம் :

இலக்கியம் :

அடையாளம் பதிப்பகம் :