ஆஸ்துமா, நீரிழிவு, ரத்த அழுத்தம் நீக்கும் யோகாசனங்கள்

ஆசிரியர்: ஆசனா இரா.ஆண்டியப்பன்

Category யோகாசனம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperBack
Pages 270
Weight200 grams
₹100.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நோயை நீக்குவதற்கு ஆசனப் பயிற்சியைப் பற்றி ஆராயும் முன்பு சில ஆரோக்கிய விதிகளைப் பற்றி கவனிப்போம். இது நோய் கண்டவர்கள் விரைவில் குணமடையவும் பெரிதும் உதவும் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று நாம் அனைவரும் அறிவோம். அந்த நோயற்ற வாழ்வைப் பெறுவதற்கும் நாம் சற்றேனும் தெரிந்தோமா? இல்லையே! வியாதி வந்து குணமடைவதை விட வியாதி வராமலேயே தடுப்பது மிக நல்லது. என்றும் நிலைபெற்ற சுகத்தைப் பற்றி நமது கவனத்தைச் செலுத்துவது மிக நல்லதல்லவா? வியாதி வராமல் தடுப்பதிலும், வந்தபின் அறவே களைவதிலும் யோகாசனம் ஒரு உறுதியான உபாயமாகும்.
நாட்டில் மக்களில் பெரும்பாலோர் நமக்கு வரக்கூடிய சாதாரண வியாதிகளைப் பற்றி தெளிவான உண்மைகளைத் தெரிந்து கொள்ள முடியாமல் டாக்டர்களுக்கும், வைத்தியர்களுக்கும் கொட்டிக் கொடுக்கிறார்கள். காலா காலத்தில் யோகாசன பிராணாயாமங்களால் அநேக வியாதிகளை, கடுமையாகாமல் தடுத்து குணப்படுத்தி விடலாம். ஒருவன் தன்னுடைய சுகத்தைப் பற்றி அறியாதிருந்தால் அது நல்லதல்ல. அதனைப் புறக்கணித்தால் அவன் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசனா இரா.ஆண்டியப்பன் :

யோகாசனம் :

பாரதி பதிப்பகம் :