ஆழ்வார்கள்(ஓர் எளிய முறையில் அறிமுகம்)

ஆசிரியர்: சுஜாதா

Category ஆன்மிகம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 136
Weight200 grams
₹90.00 ₹76.50    You Save ₹13
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



“ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்" என்ற இந்நூலில் பிரபல எழுத்தாளரும், வைணவருமான - சுஜாதா எல்லா ஆழ்வார்களையும் ஆண்டாளையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். கிபி 650 முதல் 950 வரையிலான காலத்தைத் தமிழில் பக்தி இலக்கிய காலம் என்பர். இதில் வைணவத்தைச் சார்ந்த பாடல்கள் 'நாலாயிர் திவ்யப் பிரபந்தம்' என்று நாதமுனிகளால் தொகுக்கப் பட்டன. இவைகளை இயற்றிய ஆழ்வார்கள் பக்தி நெறியையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். திருமாலை எப்போதும் மறக்காதவர்கள். திருமால் ஒருவனே பரம்பொருள் என்று நிருபித்தவர்கள். மனிதநேயத்தை வளர்த்தவர்கள். தமிழுக்கு மேன்மையளித்தவர்கள். இவர்கள் அனவைரும் பகவானின் அம்சங்கள் எனக் கருதப் படுகிறார்கள் ஆழ்வார்களை எளிய தமிழில் அவர்கள் காலம், வாழ்க்கை பற்றிய சரித்திரக் குறிப்புகளுடன் அறிமுகப்படுத்தி பல பாடல்களின் நேரடியான பொருளைச் சொல்லும் இந்நூலின் முதல் நோக்கம் ஆழ்வார்களைப் பற்றியே அறியாதவர்களுக்கு அவர்கள் மேல் ஈடுபாடு எற்படுத்துவதே. மேற்கொண்டு அவர்கள் பாடல்களின் உள்ளர்த்தங்களையும் ஸ்வாபதேசங்களையும் அறிய விரும்பினால் அவைகளை
விரிவாக பல வைணவ நூல்களில் காணலாம். வைணவம் என்னும் மகா சாகரத்தின் கரையில் இருந்து கொண்டு அதை வியப்பாகப் பார்த்து ஆழ்வார்கள் மேல் ஒரு பிரமிப்பையும் மரியாதையையும் வாசகர்களிடம் ஏற்படுத்துகிறார் சுஜாதா.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

ஆன்மிகம் :

விசா பப்ளிகேசன்ஸ் :