ஆளும் வர்க்கமாக அறிவு ஜீவிகள்

ஆசிரியர்: வான்முகிலன்

Category தத்துவம்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaper Back
Pages 56
First EditionNov 2008
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹30.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'ஆளும் வர்க்கமாக அறிவுஜீவிகள்' என்ற இச்சிறு நூல் சில முக்கியமான தகவல்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆளும் வர்க்க அறிவுஜீவிகளாக இந்நூலாசிரியரால் வரையறுத்துக் கூறப்படும் அனைவரும் நம்மோடு அன்றாடம் தொடர்பு கொள்பவர்கள் தான். அவர்களில் நாமும் இருக்கிறோம் என்பதே உண்மை . அரசதிகாரம் தொடர்ச்சியாக தனக்கான ஆதரவு சக்திகளை பெருக்கிக் கொள்வதில் எவ்வாறு திட்டமிட்டு செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை ஆதாரங்களோடு நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். இந்திய விடுதலைக்கு முன் 'ஒயிட்காலர்' என்றால் அரசு ஊழியர்கள் என்ற கருத்தாக்கமே இருந்தது. விடுதலைக்குப் பின்னர் அந்த வகை மனிதர்கள் அனைத்து துறைகளிலும் பெருகியுள்ளனர் என்பதும் அவர்களது நலனே அரசுத் திட்டங்களின் மூலம் செயலுக்கு வருகிறது என்பதும் சாதாரண மனிதர்கள் - பெரும்பாலான கிராமவாசிகள்அறியாததாகும். மக்கள் நலன் என்றால், 'எந்த மக்கள்' என்ற கேள்விக்கு விடைதேடுவோருக்கு முக்கியத் தகவல்களைத் தருவதாகவே இச்சிறு நூலைக் கருதலாம். மார்க்சியர்களுக்கே உரிய நுண்ணுணர்வுடன் நூலாசிரியர் அசோக் ருத்ரா தமது கருத்துக்களை ஆதாரத்துடன் எடுத்தாள்கிறார். தமிழ் வாசகர்களுக்கு நூலாசிரியரை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். இந்நூலையும் இத்துடன் Postmodernism, Imagined Religious Communities?, The Social Philosophy of Buddhism & The Problem of Inequality, Science, Philosophy & Society - முதலிய நூல்களையும் தமிழாக்கம் செய்து வெளியிட அறிவுறுத்திய தோழர் பாஸ்கர் அவர்களுக்கும் மொழி பெயர்ப்பாளர் வான்முகிலன் அவர்களுக்கும் மொழிபெயர்ப்பு களை சரிபார்த்து உதவிய நண்பர் ஜி. சுந்தர் அவர்களுக்கும் எமது நன்றி என்றும் உரியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வான்முகிலன் :

தத்துவம் :

அலைகள் வெளியீட்டகம் :