ஆறு - மனம் அறிதல்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category சமூகம்
Publication செம்மை வெளியீட்டகம்
FormatPaperback
Pages 104
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here"எந்தக் கதவு எளிதாகத் திறக்குமோ அந்தக் கதவை எட்டி உதைப்பதுதான் மனிதர்களின் வழக்கம்.எந்தக் கதவு கல் கதவாக இருக்கிறதோ அதை வணங்கிவிட்டுச் செல்வது இதோ மனிதர்களின் வழக்கம்.நீங்கள் உங்களுடைய அகத்தை உங்களுடைய விடுதலையை எவர் வேண்டுமானாலும் எட்டி உதைக்கும் கதவாக வைத்திருக்கும் வரை,எல்லோரும் கல் வீசுவார்கள்,எட்டி உதைப்பார்கள்.நீங்கள் உங்களுடைய மனத்தைக் காண்பதற்கு அரிய வையிலான கல் கதவாக மாற்றிக்கொண்டால்,உங்கள் சுயம் பாதுகாப்பாக இருக்கும்."

மனதைப் பற்றிய உரையாடல்களுக்கு எல்லை இல்லை. எவ்வளவு பேசினாலும், எழுதினாலும் என்னால் மனதைப் பற்றிய விளக்கங்களை முழுமை யாக வெளிப்படுத்த இயலவில்லை . மனம் குறித்து எனக்குள் வழங்கப்படும் பாடங்களையும் அப்படியே என்னால் வெளியில் கடத்த இயலவில்லை. மனம், உணர்வுகளை மட்டும் கொண்ட பெருவெளி. இச்சமூக மனிதர்களோ, உணர்வுகளைப் பற்றிய அடிப்படைப் புரிதல்கூட இல்லாதிருக்கின்றனர். உணர்வு என்றால் என்ன எனும் கேள்வியையும் பலர் என்னிடம் கேட்பதுண்டு. எல்லோருக்கும் அறிவைப் பற்றியும் உணர்ச்சிகளைப் பற்றியும் தெரிகிறது. உணர்வுகளைப் பற்றித் தெரிந்தவர்கள் எண்ணிக்கையில் குறைவு.

உங்கள் கருத்துக்களை பகிர :
ம.செந்தமிழன் :

சமூகம் :

செம்மை வெளியீட்டகம் :