ஆறுமுகசாமியின் ஆடுகள்

ஆசிரியர்: சா.கந்தசாமி

Category சிறுகதைகள்
Publication நற்றிணை பதிப்பகம்
Pages 304
₹220.00 ₹198.00    You Save ₹22
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தரம் குன்றாது, சீராக எழுதிக்கொண்டிருக்கும் சா.கந்தசாமியின் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது.

இத்தொகுப்பில் சா. கந்தசாமியின் தொடக்க காலக் கதைகளில் ஒன்றான புகழ்பெற்ற ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ கதை முதல் அண்மைக் காலத்துக் கதைகள் வரை சேர்க்கப்பட்டுள்ளன.

முதல் வாசிப்பில் சாதாரணமாகத் தோற்றமளிக்கும் சா.க.வின் கதைகள், சற்றுக் கூர்மையான நோக்கில் ஆழங்களையும் நுணுக்கங்களையும் நோக்கிச் சத்தம் இல்லாமல் அழைத்துச் செல்பவை. சாதாரண மக்களின் வாழ்க்கையின் ஊடாகப் பொதிந்தும் புலப்படாமலும் இருக்கும் வாழ்க்கை மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் விளம்புபவை சா.கந்தசாமியின் கதைகள்

தமிழ் மொழியின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களில் சா.கந்தசாமி முன்னணியில் இருப்பவர் என்பதை அழுத்தமாகச் சொல்பவை இந்தத் தொகுப்புக் கதைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :