ஆறாம் திணை (பாகம் 2)

ஆசிரியர்: கு.சிவராமன்

Category சமையல்
FormatPaperback
Pages 183
ISBN978-81-8476-594-6
Weight250 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மழைக் காலத்தில் காய்ச்சல் வரும். மழை-பனிக் காலம் முடியும் வரை குளிர்பானங்கள், குளிரூட்டப்பட்ட உணவுகள், இனிப்புகள் வேண்டாம். எல்லா உணவுகளிலும் காரத்துக்கு மிளகு மட்டுமே பயன்படுத்தலாம். மணத்தக்காளி வற்றல், மிளகு போட்ட தூதுவளை ரசம், மிளகுத் தூள் தூவிய நாட்டுக் கோழிக் குழம்பு.... இவற்றை அடிக்கடி ருசிக்கலாம். காலை இஞ்சி, மதியம் சுக்கு, மாலை கடுக்காய் அருந்த நோய் வராது என்பது சித்தர் வாக்கு. காலையில் இஞ்சித் தேனூறலையும், மதியம் சுடு சாதத்தில் இரண்டு சிட்டிகை அளவு சுக்குத் தூளும், மாலை பிஞ்சு கடுக்காய்த் தூள் ஒரு தேக்கரண்டி அளவும் சாப்பிட்டு வாருங்கள். தேநீரில், அன்னாசிப் பூவும் துளசி இலையும் போட்டு அருந்தலாம். அன்னாசிப் பூவில் இருந்து எடுத்த அமிலத்தில் இருந்துதான் வைரஸ் காய்ச்சலுக்கு காப்புரிமையுடன் மருந்து விற்கப்படுகிறது.
இயற்கையின் சீற்றங்களுக்குப் பெரும்பாலும் இயற்கையிலேயே தீர்வும் இருக்கும் என்பதற்குச் சான்று, கோடையில் பூக்கும் வேப்பம் பூ. நவீனம் ஏறக்குறைய மறந்தேபோய்விட்ட உணவு, வேப்பம் பூ ரசம். வேப்பம் பூவைச் சேகரித்து நிழலில் உலர்த்திக் காயவைத்துக்கொள்ளுங்கள். (நாட்டு மருந்துக் கடை, அப்பளம், வடகம் விற்கும் கடைகளில் வேப்பம் பூ கிடைக்கும்!) சாதாரணமாக ரசப் பொடிக்குப் போடும், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, சீரகம் இவற்றுடன் கூடுதலாக இந்த வேப்பம் பூவையும் சேர்த்து ரசம் வைத்து கோடையில் வாரம் மூன்று நாள் சாப்பிட்டால், அம்மை நம்மை அணுகாது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கு.சிவராமன் :

சமையல் :

விகடன் பிரசுரம் :