ஆர்தரின் சூரியன்

ஆசிரியர்: ஹட்ஜாக் குல்னஷர்யன் தமிழில் : கொ.மா.கோ.இளங்கோ

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 32
First EditionDec 2017
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$1.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

குழந்தைகளின் மாய உலகில் கோடிக்கணக்கான அதிசயக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. உலக சிறார் இலக்கியத்தில்சிறந்த பங்களிப்பு அன்றைய சோவியத் நாட்டு ! எழுத்தாளர்களைச் சாரும். அப்படியொரு அதிசயக் கதைகளில் ஒன்றான ஆர்தரின் சூரியனை' எழுதியவர்ஹட்ஜாக் குல்னஷர்யன்.ஆர்தருக்கு பாட்டி என்றால் உயிர். அவன், பாட்டியின் தீராத கால்வலியைப் போக்க எண்ணினான். சூரிய ஒளி பட்டால் மூட்டுவலி காணமல் போகும் என்று பாட்டி சொன்னதைக்கேட்ட ஆர்தர் வெளியே எட்டிப் பார்க்கிறான். மழை நாட்களில், சூரியன் பகல் நேரம் முழுவதும் முகம்காட்டுவதில்லை . சூரியனை முகம் காட்டவிடாமல் மறைத்துவைத்திருக்கும் கருமேகங்களை என்ன செய்யலாம்? அதை விடுவிக்கச் சொல்லி அன்பான வார்த்தைகள் பேசியும் நகர்ந்து செல்லாத மேகங்களை, பொம்மைத் துப்பாக்கியால் சுடுவதைத் தவிர வேறென்ன செய்வது? ஆனாலும் சூரியனுக்கு மேகங்களிடமிருந்துவிடுதலை கிடைக்கவில்லை. பிறகு என்ன செய்வது? பாட்டியின் கால்வலியைக் குணமாக்க வேறு என்ன வழி? ஒரு காகிதத்தைத் தேடி எடுத்து, சூரியனை வரைந்து வண்ணம் தீட்டுகிறான் ஆர்தர். பாட்டியின் காலுக்கு அருகில் அந்த ஓவித்தை வைத்துவிட்டுக் காத்திருக்கிறான். பாசம் நிறைந்த ஓர் அப்பாவிச் சிறுவன் பாட்டியின் கால் வலியைச் சரிசெய்த உற்சாகத்தில் மகிழ்ச்சி அடைகிறான். வாசிக்கும் நம்மையும் வியப்பில்ஆழ்த்துகிறான். '

உங்கள் கருத்துக்களை பகிர :