ஆரியம் x தமிழ்த்தேசியம்

ஆசிரியர்: பெ.மணியரசன்

Category தமிழ்த் தேசியம்
Publication பன்மைவெளி வெளியீட்டகம்
FormatPaperback
Pages 224
Weight300 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




இந்தியத்தேசிய ஊர்தி மேல் ஏறிவரும் இந்துத்துவா என்ற ஆரியத் துவாவைத் தடுத்திட, முறியடித்திடத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியமே முதன்மையான தத்துவமும் அரசியலும் ஆகும். இந்தியத்தேசியம் என்ற இல்லாத தேசியத்தை முன்வைக்கிறது ஆரியத் துவா! அதை எதிர்கொள்ள நாம் இயற்கையான தமிழ்த்தேசியத்தை முன்வைக்கிறோம். அவர்கள் இந்தியர் அல்லது பாரதீயர் என்ற இல்லாத தேசிய இனப் பெயரை முன் வைக்கிறார்கள். ஏனெனில் இந்தி பேசும் மாநிலங்களில் தேசிய இனமும் தேசியத் தாயகமும் அமையவில்லை . நாம் இயற்கையான - நீண்ட வரலாறு கொண்ட "தமிழர்" என்ற தேசிய இனத்தை முன் வைக்கிறோம்! இந்தியத்தேசியம், இந்தி மற்றும் சமற்கிருதத்தை முன் நிறுத்துகிறது. நாம் தமிழை முன் நிறுத்துகிறோம். ஆரியத்துவா வேத இதிகாச காலப் பழம் பெருமையை முன் வைக்கிறது. நாம் சங்ககாலத் தமிழர் வாழ்வின் பெருமிதங்களை முன் வைக்கிறோம். ஆரியத்துவா பகவத் கீதையை முன் வைக்கிறது. நாம் திருக்குறளை முன் வைக்கிறோம்! தமிழ்நாட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைய முயலும் பாரத மாதாவைத் தடுத்துத் தமிழ்த் தாயைக் காப்பதெனில், தமிழ் இன உணர் வுள்ள இளைஞர்கள் தமிழ்நாட்டின் வாயில் காப்புப் படை வீரர்கள் போல் செயல்படவேண்டும். அவர்கள் கையில் ஏந்த வேண்டிய தத்துவ ஆயுதம் தமிழ்த்தேசியம்!


உங்கள் கருத்துக்களை பகிர :
பெ.மணியரசன் :

தமிழ்த் தேசியம் :

பன்மைவெளி வெளியீட்டகம் :