ஆய்வு மலர்கள்

ஆசிரியர்: கி. பார்த்திபராஜா

Category ஆய்வு நூல்கள்
Publication பரிதி பதிப்பகம்
Formatpaper back
Pages 120
First EditionJan 2017
ISBN978-81-930476-8-2
Weight50 grams
Dimensions (H) 3 x (W) 2 x (D) 1 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆய்வுக் கண்ணோட்டத்திற்கு ஆய்வுப் படிப்புக்கும் சம்பந்தம் உண்டா ? என்ற வினா என்னில் அடிக்கடி எழுவது உண்டு. இந்த வினாவை அறிவுக்கும் படிப்புக்கும்' இடையே உள்ள சம்பந்தத்தோடும் நான் இணைத்துச் சிந்திப்பது உண்டு. படிப்பு என்பது அறிவை நோக்கி உந்த வேண்டும் என்ற அளவிலேயே நான் வகுப்பறைக் கல்வியைப் புரிந்து கொள்கிறேன். ஆய்வுப்படிப்பைப் படிப்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிகிறேனெனினும் ஆய்வுக் கண்ணோட்டத்தை உருவாக்குவது ஒரு பெரும்பணி, அதில் வெறுமனே பட்டம் மட்டுமே வழங்குகிறோம் நாம் என்ற குற்றவுணர்வு எனக்கு அடிக்கடி எழுவது உண்டு
ஆனாலும், ஆய்வுத்துறைக்குள் அடியெடுத்து வைக்கும் இளம் ஆய்வாளர்களைக் கரம்பற்றி அழைத்து நடைபழக்குவது அவசியம் என்பதை அறிந்துள்ளேன்.
தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற மாணவர்கள், அடுத்து வந்து விழுவது ஆய்வியல் நிறைஞர் படிப்பில்தான். பள்ளி ஆசிரியர்களாவதற்கான 'கல்வியியல்' பட்டம் பெற்றோரும், ஆய்வியல் நிறைஞர் படிப்புக்கு வருவது உண்டு. முதுகலை, கல்வியியல் பட்டத்தோடு ஆய்வியல் நிறைஞர் பட்டம் கூடுதலாகப் பெற்றால், ஆசிரியப்பணியில் கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு கிடைக்கும் என்பதே அதற்கு முதன்மை நோக்கம். அவ்வாறு ஆய்வியல் நிறைஞர் படிப்புக்கு வரும் மாணவர்களோடு ஓராண்டு துறைப்பொறுப்பாளராக, துறைத்தலைவராக ஊடாடியதன் விளைவே இப்போது உங்கள் கைகளில் தவழும் ' ஆய்வு மலர்கள்' என்னும் தொகுப்பு நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி. பார்த்திபராஜா :

ஆய்வு நூல்கள் :

பரிதி பதிப்பகம் :