ஆயிரம் பாடல்கள்

ஆசிரியர்: வைரமுத்து

Category நாட்டுப்புறவியல்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHard bound
Pages 1216
Weight1.45 kgs
₹600.00 ₹564.00    You Save ₹36
(6% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866குடும்பத்துடன் கோவை - சிங்காநல்லூரில் தங்கியிருந்தபோது கட்சிப் பணிகளுக்கிடையே, நான் வசனம் எழுத - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் முதல்முதலாகக் கதாநாயகனாக நடிக்க - 1947ஆம் ஆண்டு அதாவது-அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் 'ராஜகுமாரி'. அந்தப் படத்தில், உடுமலை நாராயண கவிராயர் இயற்றி எம்.எம். மாரியப்பா பாடிய பாடல் இதோ: “பாட்டை என்ன சொல்லுவேன் - பாங்கி பாவலர் ஞான ஓவியமான (தமிழ்ப்) பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும் இன்னிசைக் கூட்டினிலும் இன்பம் ஊட்டிடும் ஆனந்தப் (பா) ஆட்டம் ஆனந்தம் தரும் - சதுர் அழகான மயில் போலும் ஒயிலாக ஆடும் சதுர் (ஆ) பாட்டுக்கிசைந்த ராகதாளம் கூட்டி - தமிழ்ப் பார்வையுடன் கரங்கள் கால்கள் ஆட்டி தீட்டும் கவிப்பொருள் தெரியக் காட்டி சிந்தை மகிழ இந்த தேகாரோக்கியம் பெறும்” இந்தப் பாடல் எழுதப்பட்ட சூழல், இசை அமைக்கப்பட்ட பாங்கு, பதிவு செய்யப்பட்ட முறை ஆகிய அனைத்தையும் 'கோவை - ஜுபிடர் நிறுவனத்தில்’ அருகிருந்து பார்த்த நாள் முதல், கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இடையறாத எனது அரசியல் - இலக்கியப் பணிகளோடு தமிழ்த் திரை இசைப் பாடல்களின் ஓட்டத்தையும், பரிமாணத்தையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வைரமுத்து :

நாட்டுப்புறவியல் :

விசா பப்ளிகேசன்ஸ் :