ஆமென்

ஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்

Category கதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperBack
Pages 224
First EditionDec 2010
ISBN9789380240152
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 2 x (D) 15 cms
$8.75       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866துறவியான சகோதரி ஜெஸ்மி கன்னிகாஸ்திரி வாழ்க்கையையும் மடத்தையும் துறந்த பின்னணியை
விவரிக்கிறது 'ஆமென்'. இருபத்து நான்கு வருடங்களுக்கும் மேலாக நடத்திவந்த வாழ்க்கையிலிருந்து வெளியேற அவரைத் தூண்டியவை மதத்தின் பெயரால் செய்யப்படும் ஆன்மீக மீறல்கள், மடங்களுக்குள்
நிகழும் ரகசியக் கொடுமைகள், 'வழியும் உண்மையும் ஒளியுமான மீட்பரிடமிருந்து கிறித்துவம்
விலகுகிறது என்னும் பகுத்தறிவு. வெண்தாமரைபோலப் புனிதத் தோற்றம் கொண்டிருக்கும் துறவு வாழ்க்கையிலும் காமத்தின் நிழலும் சுயநலத்தின் கூச்சலும் நிரம்பியிருப்பதை Co ஜெஸ்மி பகிரங்கப்படுத்துகிறார். மடத்திலிருந்து வெளியேறிய போது இயேசுவையும் கிறித்துவத்தின்
கருணையையும் உடன் கொண்டுவந்ததாகச் சொல்லும் ஜெஸ்மியின் தன்வரலாறு மறைக்கப்பட்ட
உண்மைகளின் வாக்குமூலம். மலையாளத்தில் வெளிவந்த ஓராண்டுக்குள் ஐம்பதாயிரம் படிகளுக்கும் அதிகமாக விற்பனையாகி
ஆங்கிலம் உட்படப் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் நூலின்
தமிழாக்கம் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
குளச்சல் மு. யூசுப் :

கதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :