ஆப்ரிக்கா கண்டத்தில் பல ஆண்டுகள்

ஆசிரியர்: லக்ஷ்மி

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
Formatpaper back
Pages 143
First EditionDec 1978
3rd EditionDec 2009
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சுமார் இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நான் தென் ஆப்பிரிக்காவில் வசிக்க நேரிட்டது. அப்போது எனக்கு வைத்தியர் என்ற முறையில் பல்வேறு மக்களிடையே பழகும் நிலை உண்டாயிற்று. மதம், கலாசாரம் என்ற சமூக நிலையில் பலவிதமான மனிதர்களோடு பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது. வைத்தியத்துறையிலும் சரி, மதத்துறையிலும் சரி, ஏன் இதர கலாசார துறைகளிலும் சரி, ஆப்பிரிக்க நாட்டின் வரலாற்றினை அறிந்து கொள்ள எனக்கு அனுபவங்கள் உதவின;
அந்த நாட்டின் பல இன ஆப்பிரிக்க மக்களோடு கலந்து பழகினேன். அவர்களது வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள் யாவும் எனது வியப்பு கலந்த ஆராய்ச்சிக் கண்ணோட்டத்திற்கு இலக்காயின. அவர்களது இனங்கள், மொழிகள், பண்பாடுகள் யாவுமே என்னை ஒரு நூதனமான உலகிற்கே அழைத்துச் சென்றன.
நூறு வருடங்களுக்கு மேலாக, நம் இந்திய மண்ணிலிருந்து, “திரைகடல் ஓடி திரவியம் தேடச்சென்ற நம் நாட்டு மக்கள், அங்கே வாழ்கின்றனர். வளமான நாடு. வனப்பு மிக்க தேசம், இயற்கையின் எழிலும், நாட்டின் செழிப்பும், நமது மக்களின் அயராத உழைப்புமாக, அவர்களைமிக்க வசதியோடு வாழ வைத்திருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
லக்ஷ்மி :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :