ஆப்கானிஸ்தான் முஜாஹத்களின் தியாக வரலாறு

ஆசிரியர்: டி.ஏம்.மணி

Category வரலாறு
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 176
First EditionJun 2014
4th EditionNov 2013
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

"முஜாஹிதீன்ஃ என்றழைக்கப்படும் இவர்கள் யார்? எல்லாம் வல்ல இறைவனைத் தவிர வேறு யாருக்கும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை, அடிபணியத் தேவையில்லை என்ற இஸ்லாமியத் தத்துவத்தை முன்னிறுத்தி தங்கள் வாழ்வின் அனைத்து சுகங்களையும் தியாகம் செய்து, தமது தாய்நாட்டைஆக்கிரமித்த அந்நிய நாட்டவரை எதிர்த்து. வீறுகொண்டெழுந்தவர்கள்தாம் இந்த முஜாஹித்கள்.ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து ஆட்சி நடத்தலாம்; கம்யூனிஸத்தை அந்நாட்டு மக்களிடம் திணித்துவிடலாம் என்ற எண்ணத்தில் தனது ராணுவத்தை அனுப்பி அட்டூழியம் செய்த ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் எண்ணத்தையே தூள்தூளாக்கிய அந்தவிடுதலைப் போராளிகளின் வீர வரலாறுதான் இந்நூல்.
மனித மாண்புகளை மண்ணிலே போட்டு மிதித்துவிட்டு ரஷ்ய வல்லரசு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது இரண்டொரு தினங் களில் ஆப்கானிஸ்தான் கம்யூனிசத்தின் கோட்டையாக மாறிவிடும் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஆக்கிரமிப்பை ஆர்வத்தோடு செய்த ரஷ்யாவினால் நீண்ட நெடியதொரு காலம் வரை ஆப்கானிஸ்தானில் எதையும் சாதித்திட இயலவில்லை. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொலை செய்ததைத் தவிர. இது உலக மக்களின் கவனத்தைக் கவர்ந்தது. போர்களைப் பற்றி எழுதும் எழுத்தாளர்கள், இராணுவத்தில் பல சாகசங்களை நிகழ்த் திக்காட்டி ஓய்வு பெற்று இராணுவ அரங்குகளில் நடப்பனவற்றை உன் னிப்பாகக் கவனித்து வருபவர்கள் இவர்களெல்லாம் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து அங்கே என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதைக் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தனர். ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்களின் ஒரு சிறு குழுவினர் ரஷ்யப் பெரும்படையைத் தாக்கி, தடுத்து நிறுத்தி, அதனை அழிவுக்கும் அவ மானத்திற்கும் ஆளாக்கி வருகின்றார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :