ஆத்ம தரிசனம்

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaperback
Pages 33
First EditionJan 2015
ISBN978-81-8085-207-7
Weight50 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹10.00 ₹9.00    You Save ₹1
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


“நல்லவர்களுக்குத் தலைவிதி என்பது ஒன்று இல்லை. எத்தகைய கடினமான சூழ்நிலையையும் அவர்கள் தவத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். தவத்துக்கு நிகரான செயல் இல்லை. பாண்டவர்கள் 'பன்னிரண்டு வருஷங்களும் ஆழ்ந்து தவத்தில் ஈடுபட்டார்கள். மானுட சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியைப் பெற்றார்கள். வாழ்க்கையில் பெருநிலையை அடைந்தார்கள். நம் வாழ்க்கையிலும் உடைமையும் வறுமையும் மாறி மாறி வரும். நாம் நல்ல ஆத்மசாதகர்களாக இருப்போமானால் கேடு காலம், தலைவிதி, கஷ்டகாலம் என்றெல்லாம் சொல்ல மாட்டோம். அப்படிப் பேசுகிறவர்கள் அக்ஞானத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்தவர்கள் அல்லர். வாழ்க்கைத் தத்துவத்தைச் சரியாக அறிந்து கொள்பவர்கள் கர்மத்தைத் தலை விதியாகக் கொள்ளாது கர்மத்தைக் கிடைப்பதற்கரிய பேறாகக் கருதுகின்றார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :