ஆதித்தனின் நிழல் பாகம் - 01

ஆசிரியர்: கிருஷ்ணராவ் கோவிந்தராஜன்

Category சரித்திரநாவல்கள்
Formatpapper back
Pages 544
Weight500 grams
₹400.00 $17.25    You Save ₹20
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆதித்தனின் செங்கதிர் ஒளிவீசிக் கொண்டிருந்த மார்கழி மாதத்துக் குளிர்கால மாலை நேரத்தில் தோட்டம் மிக ரம்மியமாகத் தெரிந்தது. மாமரங்கள், பலா, வாழை என்று பல வகைப்பட்ட பழ மரங்கள் ஒரு பக்கமும், மல்லிகை, முல்லை, ஜாதி மல்லி, செம்பருத்தி என்று வண்ண மலர்களும் வாச மலர்களும் பூத்துக் குலுங்கும் செடி கொடிகள் ஒரு பக்கமுமாக இருக்கும் என் தோட்டத்தில் நான் உலாவிக் கொண்டிருந்தேன். என்னுடன் என் நிழலும் கூடவே வந்து கொண்டிருந்தது!
எனக்கு மட்டுமா நிழல் உடன் வரும்? எல்லாருக்கும்தான் நிழல் உடன் வருகிறது! மரம், செடி, கொடிகளுக்கும் கூடத்தான் நிழல் விழுகிறது! ஏன், சந்திரனுக்கும் பூமிக்கும் கூடத்தான் நிழல் இருப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்களே! ஆனால் ஒளி வீசும் ஆதித்தனுக்குத்தான் நிழல் இல்லை!
"ஆதித்தனுக்கு நிழல் இல்லை என்று யார் சொன்னது ?" ன்று ஒரு குரல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் அருகில் யாரும் ல்லை! என் நிழலுக்கருகில் ஒரு நெடிந்துயர்ந்த நிழல்

உங்கள் கருத்துக்களை பகிர :
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் :

சரித்திரநாவல்கள் :

வானதி பதிப்பகம் :