ஆதலினால் காதல் செய்வீர்

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 144
Weight150 grams
₹75.00 ₹63.75    You Save ₹11
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பொதுவாக நாவல்களிலும் சிறுகதைகளிலும் வர்ணனைகள், வார்த்தை ஜாலங்கள், நீண்ட உரையாடல்கள் ஆகியவற்றை மக்கள் பெரிதும் விரும்பிப் படித்து வந்தனர்.
இந்த விஞ்ஞான யுகத்தில் வாசகர்கள் எதையும் சுருக்கமாகவும் எளிதாகவும் படித்து மகிழ எண்ணுகின்றனர். அவர்களின் எண்ணத்திற்கேற்ப இன்றைய எழுத்தாளர்களும் எழுதி வருகின்றனர்.
வாசகர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப படைப்பிலக்கியங்களை உருவாக்குபவர்களே எழுத்துலகில் முன்னணி நட்சத்திரங்களாக மின்ன முடியும்; மின்னிக் கொண்டும் இருக்கிறார்கள்.
இன்றைய தமிழ் எழுத்துலகில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்பவர்களில் திரு. சுஜாதா அவர்களும் ஒருவர்.
இந்த 'ஆதலினால் காதல் செய்வீர்' என்னும் நாவலை, தனக்கே உரிய நடையில் கொண்டு செல்கிறார். சொல்வதைச் சுருக்கமாகவும், தெளிவாகவும், வாசகர்களின் ரசனைக்கேற்பவும் சொல்கிறார்.
குமுதம் வார இதழில் தொடராய் வந்த இந்த நாவலை அழகிய முறையில் உங்கள் கரங்களில் தவழ விடுவதில் பெருமிதம் அடைகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :