ஆண்டோ எனும் மாயை

ஆசிரியர்: இரா.பாரதிநாதன்

Category சிறுகதைகள்
Publication களம் வெளியீட்டகம்
FormatPaperback
Pages 120
Weight150 grams
₹100.00 ₹80.00    You Save ₹20
(20% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தறியுடன்.... வந்தேறிகள், ஆக்காட்டி என மூன்று நாவல்களையும், 'கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம்' என்ற புத்தகத்தையும் எழுதிய நான் ஒரு சிறுகதையாசிரியனாய் இந்த தொகுப்பின் வாயிலாக உங்களிடம் அறிமுகம் செய்து கொள்கிறேன். பல்வேறு கட்டங்களில், உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் நானும் ஒருவனாய் பங்கு கொண்டு அவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களே இந்த சிறுகதைகள். இதில், வரும் மனிதர்கள் யாவரும் உண்மையாய் சமூகத்தில் நிலவும் கருத்துக்களை கொண்டவர்களே. அவர்ளை எழுதுவதின் மூலம் என்னை நானே பட்டைத் தீட்டிக் கொள்கிறேன்.

இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள், பற்பல நேரங்களில் என் வாழ்க்கையில் நேரிட்டதுதான். என் சொந்த ஊரில் விசைத்தறி தொழிலாளியாய் இருந்த போது எத்தனயோ எண்ணற்ற அனுபவங்கள். ஒரு மனிதனுக்கு தன் வாழ்க்கை அனுபவங்களை விட, சிறந்த கதைகள் எங்கிருக்கிறது? அதிலும், உழைக்கும் மக்கள் மத்தியில் சுரங்கம் போல் பலநூறு கதைகள் நவரத்தினங்களாய் கொட்டிக் கிடக்கின்றன. நமக்கு ஒவ்வொன்றையும் கவனமாய் நின்றுகிப் பார்க்கும் திறனும், கற்பனை வளமும்தான் தேவை. நடந்ததைச் சொல்லும் போது... அதற்குத்தான் ஒரு எழுத்தாளனுக்கு கலை அம்சம் உதவி புரிகிறது. புற உலகம், அக உலகின் வழியே கலை எனும் ரசவாதம் நிகழ்கிறது. இவற்றில் சில சிறுகதைகள் 'செந்தாரகை' மற்றும் ' புதிய கலாச்சாரம்' இதழ்களில் வந்தவை. என் முதல் சிறுகதை தொகுப்பு இது. உங்கள் ஆதரவு வேண்டுகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இரா.பாரதிநாதன் :

சிறுகதைகள் :

களம் வெளியீட்டகம் :