ஆட்டத்திலே நானும் இருக்கேன் (கவிதைகள்)
ஆசிரியர்:
பொள்ளாச்சி குமாரராஜன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29?id=1210-6849-0042-6457
{1210-6849-0042-6457 [{புத்தகம் பற்றி சமூகத்தின் போக்கினை உள்வாங்கி, அதற்கான காலத் தேவையை, தன் கவிக்குரலாகப் பிரதிபலிப்பவனே கவிஞன். 'வார்த்தைக்கு வெளியே கவிதை இருக்கிறது' என்றொரு கவிஞன் சொன்னதைப் போலவே, 'கவிதைக்கு வெளியேயும் கவிதை இருக்கிறது' என்பதை உணர்ந்து கொண்டாலே போதும் எது கவிதையென்கிற குழப்பங்கள் நீங்கி, இதுதான் கவிதை என்கிற புரிதல் நமக்குக் கிட்டும்.கவிஞனை எப்படி இந்தச் சமூகத்திலிருந்து தனியொருவனாகப் பிரிக்க முடியாதோ, அப்படியே வாழ்விலிருந்தும் தனியே பிரித்தெடுக்க முடியாதது கவிதை. எதைப் பற்றியும் தயங்கியோ, அஞ்சியோ நிற்பவனல்ல கவிஞன். அவனொரு காட்டாற்று வெள்ளம். ஓடிக்கொண்டேயிருக்கும் நதியாய், எழுதிக்கொண்டேயிருப்பது தான் கவிஞனின் பணியும். 'நமக்குத் தொழில் கவிதை' என்று சொன்ன பாரதியை என்றும் நினைவில் நிறுத்துவோம். 'இமைப்பொழுதும் சோரா(திருத்தல்)து எழுதுவோம்!' பொள்ளாச்சியில் என் நினைவில் நிற்கும் நண்பர்கள் பட்டியலில் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜனுக்கு ஒரு தனித்த இடமுண்டு. எவ்வித எதிர்பார்ப்புகளுமற்று தன்போக்கில் எழுதிக்கொண்டே இருப்பவர் பொள்ளாச்சி குமாரராஜன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866