ஆடு-மாடு வளர்ப்பு

ஆசிரியர்: விகடன் பிரசுரம்

Category விவசாயம்
Publication விகடன் பிரசுரம்
FormatPaper Back
Pages 160
First EditionNov 2010
7th EditionSep 2015
ISBN159
Weight150 grams
Dimensions (H) 1 x (W) 22 x (D) 1 cms
₹130.00 $5.75    You Save ₹13
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆடு-மாடு வளர்ப்பு ஆடுகள் எட்டு மாதங்களுக்கு ஒரு தடவை குறைந்தபட்சம் இரண்டு குட்டிகள் போடும். அந்தக் குட்டிகள் அடுத்த எட்டு மாதங்களில் குட்டி போட ஆரம்பித்துவிடும். சரியாக கருத்தரிக்காத ஆடுகளை உடனடியாகக் கழித்துவிட வேண்டும். தேவைக்கு அதிகமான கிடாக்களையும் கழிக்க வேண்டியது அவசியம். சரியான மருத்துவம் மற்றும் அடர்தீவனங்கள் கொடுத்து வளர்த்தால், 40 மாதங்களில் சுமார் 800 ஆடுகளை விற்பனை செய்ய முடியும், ஒரு ஆடு ஆயிரம் ரூபாய்க்கு விற்றாலே, 8 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆட்டிறைச்சி, தோல், ஆட்டுப்பால், புழுக்கை, உரோமம் அவ்வளவும் வருமானம் தரக்கூடியவைதான். ஆட்டுப்பால், கிராமங்களில் மருந்தாகவும் பயன்படுகிறது. ஆட்டுப்புழுக்கை, பயிர்களுக்கு நல்ல உரமாகப் பயன்படுகிறது. ஆட்டு உரோமங்களில் நெசவு செய்த கம்பளி நல்ல விலைக்கு விற்கலாம், வடநாட்டு மாடுகளான சிந்தி, கிர், தார்பார்க்கர், சாகியவால் போன்றவை சிறந்த உழவு மாடுகள் மட்டுமல்ல, அதிக அளவில் பால் கொடுக்கவும் செய்யும்: கிர் மாடுகளில் சில, 25 லிட்டர் பால்கூட கறக்கும். வெளிநாட்டு மாடுகளைப் போல ஏ.ஸி, ஃபேன் என்று நவீன வசதிகளை செய்துகொடுக்க வேண்டியதில்லை. 108 டிகிரி வெயில் அடித்தாலும் தார்பார்க்கர் மாடுகள் சளைக்காமல் மேய்ந்து கொண்டிருக்கும், நாள் கணக்கில் மழை பெய்தாலும் அப்படியே கிடக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
விகடன் பிரசுரம் :

விவசாயம் :

விகடன் பிரசுரம் :