ஆங்கில இலக்கணம்
ஆசிரியர்:
ஆர்.ராஜகோபாலன்
விலை ரூ.255
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?id=1756-3036-1889-3855
{1756-3036-1889-3855 [{புத்தகம் பற்றி நாம் அன்றாடம் தமிழிலேயே பேசுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கிறோம். எங்கே போனாலும் தமிழைக் கேட்டும் பேசியும் வருவதால் பிறர் பேசும் தமிழை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.ஆனால், ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் தவறாகிவிடுமோ என்று ஒரு தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. நம்மில் அனேகர் தமிழில் பேசும்போதும், ஆங்கிலச் சொற்களையே அதிகம் பயன்படுத்துகிறோம். இரண்டு மொழிகளையும் கலந்து பேசிப் பழகும் நமக்கு, தனி ஆங்கிலத்தில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தயக்கம் அதிகமாக இருக்கிறது. காரணம், இலக்கணப் பிழை ஏற்பட்டு, கேட்பவர் கேலி பேசக்கூடாதே என்று நினைப்பதுதான்! இப்படிப்பட்டவர்கள், பிழையின்றி ஆங்கிலம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வசதியாக ஆங்கில இலக்கணத்தை இந்த நூலில் எளிமைப்படுத்திக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் ஆர்.ராஜகோபாலன். ஒவ்வொரு வாக்கியத்தையும் உபயோகப்படுத்தும் விதம் மற்றும் அதன் ஆங்கில விளக்கங்கள் அனைத்தும் தெளிவான தமிழில் தரப்பட்டுள்ளன. ஆங்கில மாதிரி வாக்கியங்கள் அமைக்கப்பட்டு, அதற்கு தமிழ் வாக்கியங்களில் மொழிபெயர்ப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.ஓரளவு ஆங்கிலம் அறிந்த சிலர் பயன்படுத்தும் ஆங்கில வாக} {பதிப்புரை மொழி வல்லுனர்களிடையே ஒரு சர்ச்சை உண்டு. நம் மனதில் எது முதலில் தோன்றுகிறது? மொழியா அல்லது எண்ணமா? இதை யோசித்துப் பார்த்தால் (எப்படி யோசிக்கிறோம், எதன் வழியாக யோசிக்கிறோம்?), மொழியின் வழியாகவே எண்ணம் தோன்றியிருக்க வேண்டும் என நினைக்கவேண்டியுள்ளது, எண்ணம் இல்லாமல் மொழி சாத்தியமா என்பது இன்னொரு பக்கம் உருவாகும் கேள்வி. ஆக, இந்த சர்ச்சைக்கு இன்று வரை முடிவு ஏற்படவில்லை . உணர்வுகள் அருவமாகத் தோன்றி, அவற்றுக்கு உருவம் கொடுப்பது மொழி. நாம் மொழியின் மூலமாகத்தான் சிந்திக்கிறோமா? மொழி கைவரப் பெறாத வரை எண்ணம் எழாதா? மொழி கைவரப் பெறுவதற்கு முன் எண்ணங்கள் எழுந்தால் அவை எவ்வாறு இருக்கும்? இவை யாவும் நம் முன்னே இருக்கும் சவால்கள். இருந்தாலும் நாம் என்ன நினைக்கிறோமோ அதை மொழியின் வாயிலாக சரியாகச் சொல்ல முடியவேண்டும், நாம் எண்ணங்களை நினைக்க நினைக்க மொழியின் சரியான வடிவங்கள் கைவசப்படவேண்டும். அரசியல், அறிவியல், சரித்திரம், இலக்கியம் என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யாருக்கு மொழி வசப்படுகிறதோ அவர்களே முன்னுக்கு வருகிறார்கள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866