ஆங்கிலத்தில் நாம் செய்யும் தவறுகளும் அவற்றைத் தவிர்க்கும் முறைகளும்

ஆசிரியர்: லேனா தமிழ்வாணன்

Category அகராதி
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 176
Weight150 grams
₹65.00 ₹61.10    You Save ₹3
(6% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தப் புத்தகம், மாணவர்களுக்கும், வேலைக்காகப் பல்வேறு தேர்வுகள் எழுதுவோருக்கும், பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்குக் கற்றுத் தேர்ந்து, எழுத்திலும், பேச்சிலும், பல காலம் பயிற்சி பெற்ற பின்னரே, பிழையற, அழகுற, இலக்கிய மணம் கமழ, எழுத முடியும், பேச முடியும். "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்”. எதற்கும் ஆர்வம் தேவை, முயற்சி தேவை, உழைப்பு தேவை என்று எவரும் அறிவர்.
ஆங்கிலம் அன்னிய மொழி. நம் தாய் மொழியையே பிழையறக் கற்க முடியாதபோது, ஆங்கில அறிவில் சிறந்து விளங்க வேண்டுமானால், பெரு முயற்சி தேவை. ஆங்கிலப் புத்தகங்கள் பல படிக்க வேண்டும். அவைகளை ஆராய்ச்சி செய்ய வேண்டும். புதிய, புதிய சொற்களைக் கற்க வேண்டும். அந்தச் சொற்களை, செவ்வனே உபயோகிப்பதில் பயிற்சி பெற வேண்டும். புகழ் பெற்ற ஆசிரியர்கள், தங்களது நூல்களில், ஆங்கிலத்தை எவ்வாறு கையாளுகிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் பிழைகளைத் தவிர்ப்பது பற்றிய நூல்களைப் படித்ததில், ஆங்கிலத்தைக் கையாள்வதில், நாம் எவ்வளவு கவனக் குறைவாய் இருக்கிறோம் என்பது தெளிவாகிறது. புத்தகங்களையோ, நாளிதழ்களையோ படிக்கும்பொழுது, ஆங்கில அகராதி ஒன்றை வைத்துக்கொண்டால், பொருள் விளங்காத சொற்களுக்குப் பொருள் கண்டு கொள்ளலாம்.
இந்தச் சிறிய நூல், இதைப் படிப்போருக்கு, ஓரளவு பயனளிக்கும் என்று நம்புகிறேன்.
- இராம. சுந்தரம்

உங்கள் கருத்துக்களை பகிர :
லேனா தமிழ்வாணன் :

அகராதி :

மணிமேகலைப் பிரசுரம் :