அ.முத்துலிங்கம் கட்டுரைகள்(தொகுப்பு 1 & 2)

ஆசிரியர்: அ. முத்துலிங்கம்

Category கட்டுரைகள்
Publication நற்றிணை பதிப்பகம்
FormatHardbound
Pages 1846
ISBN978-81-936656-3-3
Weight2.12 kgs
₹2000.00 ₹1900.00    You Save ₹100
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



முத்துலிங்கத்தின் படைப்புகள் ஏன் மகத்தானவைகளாக எனக்குத் தோன்றுகின்றன? அவரது ஒவ்வொரு ஆக்கமும் ஒரு பயணம். அந்தப் பயணம் தொடங்கி இலக்கைச் சென்றடையும் வரை பயணப்பாதையை சுற்றி இருக்கும் அனைத்தின் மீதும் விருப்பும் வெறுப்பின்றி வெளிச்சத்தைத் தூவிக்கொண்டே வருகிறார். உரக்கப்பேசாமல் புன்னகையுடன் நம்முடன் சகபயணியாக வருகிறார். நம் வாழ்க்கையில் முன் நிற்கும் நம்மால் அதிமுக்கியம் எனக் கருதப்படும் பல வினாக்களும், விழுமியங்களும், புரிதல்களும் காணாமல் போகும் மாயமும் இந்தப் பயணத்தில் நடக்கிறது. பயணத்தின் இறுதியில் எஞ்சுவது புன்னகையும் நம்பிக்கையும்தான் வாழ்க்கை என்பது வெறும் கருப்பு வெள்ளை மட்டும் கிடையாது.பல்வேறு வண்ணங்களுக்கும் அங்கு இடமுண்டு. அவை ஒவ்வொன்றும் அதனளவில் தனித்துவமும் முக்கியத்துவமும்கொண்டது. இந்தப் பல்வேறு வண்ணங்களின் இருப்பும் கவனிக்கப்படும்போது ஏற்படும் மனவெழுச்சியை நோக்கித்தான் முத்துலிங்கத்தின் படைப்புகள் நம்மை அழைத்துச் செல்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ. முத்துலிங்கம் :

கட்டுரைகள் :

நற்றிணை பதிப்பகம் :