அ.மார்க்ஸ் சில மதிப்பீடுகள்

ஆசிரியர்: மீனா

Category தத்துவம்
Publication புலம்
FormatPaperback
Pages 384
Weight450 grams
₹220.00 ₹165.00    You Save ₹55
(25% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



எழுத்தாளர், பேச்சாளர், களச்செயற்பாட்டாளர் என 'பன்முகப் பரிமாணங்களோடு இயங்கிவருகிற பேரா. அ. மார்க்ஸ் தமிழ்ச் சூழலுக்குச் செய்திருக்கும் பங்களிப்புகள் அளப்பரியது. மரபுவழிப்பட்ட கலாச்சார பொதுப்புத்திகளுக்குப் பேரதிர்ச்சியையும் நவீன சிந்தனைகளுக்கு மனந்திறப்போரிடம் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்திய அவரது முப்பதாண்டு கால செயற்பாடுகளின் மீது தமிழின் முக்கிய எழுத்தாளர்களும் கவிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் தமது மதிப்பீடுகளை முன்வைத்துள்ளனர். நட்புரீதியான அனுமானங்கள், எழுத்துகளின் மீதான வாசிப்புகள், உடன் இயங்கிய அனுபவங்கள் ஆகியவற்றின் பின்புலத்தில் வெளிப்பட்டுள்ள 'இம்மதிப்பீடுகள் வெற்றுப் புகழுரைகளாகவோ அவதூறுகளாகவோ அன்றி அ.மா-வை விமர்சனப் பூர்வமாய் அணுகியுள்ளன. அதிகாரங்களையும் அவமதிப்புப் பிரச்சாரங்களையும் , தனிமைப்பட நேர்ந்த சூழல்களையும் எதிர்கொண்டு அ. மார்க்ஸ் ஆற்றியுள்ள பெரும் பங்களிப்புகளை நமக்குப் , பறைசாற்றுகின்ற இத்தொகுப்பு, தமிழின் ஆகப்பெரும் 'சிந்தனையாளர் வரிசையில் அ. மார்க்ஸ் தவிர்க்க இயலாதவர் என்பதற்கும் சான்று பகர்கின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மீனா :

தத்துவம் :

புலம் :