அவள் பிரிவு

ஆசிரியர்: வெ.சாமிநாத சர்மா

Category வரலாறு
FormatPaperBack
Pages 240
Weight200 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எனது வாழ்க்கைக்கு வெளிச்சம் அளித்து வந்த ஒளி விளக்கு அணைந்து விட்டது. இவ்வளவு சீக்கிரத்தில் அணைந்து விடுமென்று நான் எதிர்பார்க்கவில்லை; நினைக்கவுமில்லை. சிறிது காலமாக, - ஏன்? இரண்டு வருஷங்களுக்கு மேலாக - அது மங்கலாக எரிந்து கொண்டிருந்ததென்னவோ வாஸ்தவம். அப்படி எரிந்து கொண்டிருந்தாலும், எரிந்து கொண்டிருக்கிறதே யென்பதில் எனக்கு ஒருவித திருப்தி இருந்து வந்தது. அந்த மங்கலான வெளிச்சத்தைத் துணையாகக் கொண்டு இன்னும் சிறிது காலம் தட்டுத்தடுமாறியாவது வாழ்க்கைப் பாதையில் செல்வோம் என்ற நம்பிக்கையும் தைரியமும் இருந்தன. இப்பொழுதோ? ஒரே இருட்டு; அந்த இருட்டினால் திகைப்பு. புலம்புவதைத் தவிர வேறொன்றும் எனக்கு இப்பொழுது தெரியவில்லை .
ஆனால் எனது வெந்துயரை யாரிடத்தில் எடுத்துரைப்பேன்? என் ஒப்பாரியைக் கேட்பார் யார்? வயிற்றிலே பிறந்த மகளோ, மகனோ இல்லை; கூடப்பிறந்த சகோதரியோ சகோதரனோ இல்லை. எல்லாரும் நீங்கள் தான் இப்பொழுது எனக்கு. எனது உள்ளத்தை அறிந்த ஒருவராக, நீங்கள்தான் எனது நீர்மல்கு கண்முன்னே நிற்கிறீர்கள். கேளுங்கள் எனது புலம்பலை.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.சாமிநாத சர்மா :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :