அவணம்

ஆசிரியர்: சோலைக்கிளி

Category கவிதைகள்
FormatPaperback
Pages 544
ISBN978-81-7720-143-7
Weight500 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இடது சோலைக்கிளி கடந்த முப்பதாண்டுகளில் எழுதிய கவிதைகள் இந்நூல்
தொகுப்பாகியுள்ளன. கவிதைகள் மக்கள் மொழியில் பேசுவதால், கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையே நிகழும் ஓர் அந்தரங்கமான பேச்சைப் போல் அணுக்கமாக இருக்கின்றன; காலங்கள் உருவகங்களாக வடிவெடுக்கின்றன; இடங்கள் உயிர்பெற்ற உடல்களாக வெவ்வேறு மனநிலைகளுடன் அலைகின்றன; இடைவிடாத யுத்தத்தால் நிலமும் மனிதர்களும் அலைக்கழிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையிலும், வாழ்வின் மீதான நம்பிக்கையை கைவிடாத கவித்துவத் தன்னிலையின் உயிர்த்துவத்துடன் சோலைக்கிளியின் கவிதைகள் திகழ்கின்றன கிழக்கிலங்கைப் பிரதேசத்தின் வழக்காறுகள் செறிந்த மொழியில் இயற்கையுடனான தனது நெகிழ்ந்த உறவிலிருந்து, உயிரிலிருந்து உயிர்தாவும் பார்வைக் கோணங்களிலிருந்து தனித்துவமிக்க அறிதல்களாகவும் தொன்மங்களாகவும் தனது கவிதைளை
சோலைக்கிளி சாத்தியப்படுத்தியுள்ளார்.
காலத்தைக் காலண்டராக்குகிற வித்தையை கைவசப்படுத்தி இருப்பவர் சோலைக்கிளி. இந்த நாட்காட்டியில் எண்களுக்கும் பொழுதுகளுக்கும் பதிலாக மனித அகங்களும் முகங்களும் துலங்குகின்றன. அவணம், ஈழக்கவிதையில் ஓர் ஆவணம்.'
- சுகுமாரன்
‘ நவீன தமிழ்க்கவிதை மரபில், நத்தையின் வழித்தடம் போல் ஈரமான புதிய பாதையை சோலைக்கிளி சமைத்துள்ளார், தாவரங்களும் உயிர்களும் சமத்துவமாகத் தத்தம் தனித்துவங்களுடன் சஞ்சரிக்கும்
விநோதமான கவிதை நிலம் இவருடையது.'
ஷங்கர்ராமசுப்ரமணியன்


உங்கள் கருத்துக்களை பகிர :
சோலைக்கிளி :

கவிதைகள் :

அடையாளம் பதிப்பகம் :