அழகை ஆராதிப்போம்

ஆசிரியர்: கவிக்கோ அப்துல் ரகுமான்

Category கவிதைகள்
Publication யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
FormatPaper Back
Pages 136
ISBN9789387854390
Weight150 grams
₹125.00 ₹112.50    You Save ₹12
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866முக்தர்களை முடுக்கி, சித்தர்களைப் பக்குவப்படுத்தி, புத்தர்களை போதி நடவுக்கு ஆயத்தப்படுத்தும் கவிக்கோ, கவிதை பக்தர்களை உருவாக்கிய, கோடியாய்ப் பெருக்கிய ஆன்மிகர். மூட நம்பிக்கைகளையும் வேட நம்பிக்கைகளையும் கருத்தியல் ரீதியாகக் கலைத்துப் போட்டவர். பொதுமை ஆத்திகப் புதுமை காட்டியவர்.

பத்துவிரல் சாவிக் கொத்து, தம் வசம் இருக்கும் கருவூலத்தைத் திறக்க முயலாமல் காக்கை வலிப்புக்கே பயன்படுத்தும். இயலாமைக்கும், முயலாமைக்கும் விதி எழுத்தைக் காரணமாக்கும்
மூட மனப்பான்மைக்கு முற்றுப் புள்ளி வைக்க,

விதியின் எழுத்தைக்
கண்ணீரால்
அழிக்க முடியாது
வியர்வையால்
அழிக்கலாம்

எனப் புதிய கீதை புனைகிறார் கவிக்கோ . இறுதித் துளி வரை கொடுத்த ஈகை வானம் கவிக்கோ . ஆண்டவனுக்கு நகல் இல்லை; 'கவிக்கோ கவிதைகளுக்கும் அப்படித்தான்.

--கவியருவி அப்துல் காதர்

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிக்கோ அப்துல் ரகுமான் :

கவிதைகள் :

யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் :