அழகான இளவரசன்

ஆசிரியர்: பூவிதழ் உமேஷ்

Category கதைகள்
Publication பரிதி பதிப்பகம்
FormatPaperback
Pages 148
Weight200 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்த பூமியில் மனிதர்கள் இல்லாமல் கூட பறவைகள் வாழ்ந்துவிடும் ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது என்ற கருத்தைப் படித்தபோது நான் அதிர்ந்து போனேன் எனவே குழந்தைகளுக்குப் பறவைகளின் வாழ்வியலைப் பற்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது அந்த வெளிப்பாடுதான் இந்தப் புத்தகம் .
மற்ற கணித அறிஞர்களை ஒப்பிடும்போது கணிதமேதை இராமானுஜம் அவர்கள் ஒரு வகையில் படிக்காத மேதை என்று சொல்லலாம். நமக்கு கணிதம் சார்ந்து ஒரு நீண்ட மரபு உள்ளது ஆனால் இன்றைய குழந்தைகள் கணித பாடத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதாக எனக்கு தோன்றியதன் விளைவாக இந்த நூலில் கணித புதிர்களை சேர்த்துள்ளேன் . இந்நூலிலுள்ள கணித புதிர்கள் யாவும் மிகவும் பிரபலமானவைதான் இதில் கடைசியாக உள்ள புதிர் சிங்கப்பூர் அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக கேட்கப்பட்ட ஒலிம்பியாட் வினா ஆகும். இந்த வினா உலக அளவில் விவாதிக்கப்பட்டது. நமது தேர்வு முறைகளில் தவறாக வினாக்கள் கேட்கப்பட்டதால் விவாதிக்கப்பட்டதே ஒழிய அதன் தரத்திற்காக எப்போதும் விவாதிக்கப்பட்டது இல்லை என்ற வருத்தமான செய்தி பதிவு செய்ய வேண்டியுள்ளது.
இந்த நூலை படிக்கும் ஆசிரியர்களும் மாணவர்களும் பறவைகள் மீதும் கணிதத்தின் மீது தங்கள் பார்வையைப் நல்லபடியாக மாற்றிக் கொண்டால் அதுவே எனக்கு போதும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பூவிதழ் உமேஷ் :

கதைகள் :

பரிதி பதிப்பகம் :