அள்ளித் தரும் நிலம்

ஆசிரியர்: பாமயன்

Category விவசாயம்
Publication தமிழினி
FormatPaperback
Pages N/A
First EditionJan 2005
2nd EditionJan 2017
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹190.00 ₹180.50    You Save ₹9
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சூழலியல் மற்றும் தற்சார்பு வேளாண்மை மீட்புப் பணிகளில் இடையறாது ஈடுபட்டு வந்தபொழுது ஏற்பட்ட பட்டறிவு இந்த கையேட்டில் தேவையை உணர்த்தியது. இன்று உழவுத் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற மக்களின் வாழ்க்கை இத்தகையதொரு இன்னலை எதிர்கொண்டிருக்கிறது என்பதை இயல்பாக போக்கில் போகின்ற யாரும் கண்டறிய முடியும். உணவை உருவாக்கி உலகத்திற்கே கொடுக்கின்ற மாபெரும் பொறுப்பை தெரிந்தோ தெரியாமலோ ஏற்றுக் கொண்டிருக்கின்ற மக்கள் படிப்பறிவில் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கின்றனர். படிப்பாளிகளோ வேளாண்மையின் பக்கம் எட்டிப் பார்க்கவும் தயக்கம் காட்டுகின்றனர். எனவே எவ்வித மேம்பாடும் இல்லாமல் வருகின்றனர். பன்னெடுங்காலமாக தற்சார்புள்ளவர்களாக, பிற மக்கள் யாவருக்கும் கொடுத்து மகிழ்ப்பவர்களாக இருந்து வந்த மக்கள் இன்று தங்களைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து வருகின்றனர், தப்பி பிழைத்தவர்கள் வேளாண்மையை விட்டு ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.


மு:பாலகப்பிரமணியன் நேயம் என்னும் சிற்றிதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாள 2 ராகவும் தனது பொதுவாழ்வைத் தொடங்கியவர். குமுகாயப் பணியாளராக விருதுநகர் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு புதிய குமுகச் சோதனைகளைச் செய்து பட்டறிவு பெற்றவர். சுற்றுச்சூழலாளாராக தமிழகம் முழுவதும் இயங்கியவர், ' புதிய கல்வி இதழின் பொறுப்பாளராக சிலகாலம் பணியாற்றியவர். இதுவரை. ஏராளமான கட்டுரைகளை தினமணி, இந்து மற்றும் பல இதழ்களில் எழுதியவர். பல்வேறு நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். தமிழில் துறைச்சொற்கள் எண்ணற்றவற்றை ஆக்கி அளித்தவர். சங்க காலத்தின் நீட்சியாக தமிழருக்கென்று சாதி, சமயமற்ற ஒரு குமுகத்தை அவர்தம் திணையியப் பகுப்பை அடியாகக்கொண்டு திணையவியல் என்னும் குமுகவியலை முன்மொழியும் அறிஞர்களுள் இவரும் ஒருவர், தற்பொழுது தமிழகத்தின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற இயற்கை வேளாண்மைக் கோட்பாட்டை தாளாண்மை வேளாண்மை என வடிவமைத்து தாளாண்மை உழவர் இயக்கத்தின் வழியாகப் பரப்பி வருபவர். அவ்வியக்கத்தின் செயலாளர். தானாண்மை இதழின் ஆசிரியர். இவரது ஆர்வம் ! இலக்கியம் சூழலியல், சுற்றுச்சூழலியல், வேளாண்மை என பல துறைகளில் பரந்து விரிந்தவை, எழுதிய நூல்கள்: அணுகுண்டும் அவரை விதைகளும், வேளாண் ! இறையாண்மை விசும்பின் துளி வேளாண்மையின் விடுதலை

உங்கள் கருத்துக்களை பகிர :
பாமயன் :

விவசாயம் :

தமிழினி :