அலைபாயும் நெஞ்சங்கள்

ஆசிரியர்: சுதா ரவி

Category குடும்ப நாவல்கள்
Publication சிறகுகள் பதிப்பகம்
FormatPaperback
Pages 310
Weight250 grams
₹150.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅன்பை மட்டுமே அனுபவித்த ஒரு நெஞ்சம் ,அன்பையே அனுபவிக்காத ஒரு நெஞ்சம் ,இந்த இரண்டு நெஞ்சங்களுக்கு இடையே ஏற்படும் காதல்,வலி ,பிரிவு ,ஊடல் என அனைத்தையும் ரவுண்டு கட்டி அருமையாக “அலைபாயும் நெஞ்சங்கள் என்னும் தலைப்பில் கொடுத்து இருக்கிறார் நமது தோழி சுதாரவி “....

பொதுவாக ஆண்கள் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் அவமானங்கள் வெளியில் ஈஸியா வெளியில் வந்துடும் ,ஆனால் பெண்ணால் ஆணுக்கு ஏற்படும் அவமானம் வெளியில் தெரிவதில்லை,.அப்படி ஒரு நிகழ்ச்சி கதையின் நாயகன் நிகிலுக்கு ஏற்ப்படுகிறது ...அப்படி என்ன நடந்தது ...?”

“ஒரு உயிரை ஆழமாக
நேசிக்க ஆரம்பிக்கும்
போதே வலிகளையும்
சேர்த்து நேசிக்கக் கற்றுக்
கொண்டால் வலிகளும்
சுகமாகும்..!!இப்படி ஏங்கும் அளவுக்கு நாயகி ஸ்ருதிக்கு நடந்தது என்ன ...?

ஒருத்தரின் துரோகத்திற்கு தண்டனை மற்றவருக்கு கொடுப்பது நியாயமா ...?? என்று கதை படித்த அனைவரும் பொங்கி பொங்கல் வைத்த சம்பவமும் நடந்தது ..... இவங்களோட முந்துன கதை RJ வைக்கூட மக்கள் இப்படி திட்டலைப்பா ..ஆன நிகிலை திட்டாத ஆட்களே இல்லை ..அப்படி இவன் செய்த செயல் என்ன ...???

இதில் வரும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அருமையான மக்கள் ,இதில் காயத்திரி என்னும் ஒருவர் வருவார் ,அவர் செய்யும் செயல்கள் நான் சொல்லலை ,நீங்களே படிச்சு பாருங்க ....அப்புறம் மதின்னு ஒருத்தர் ஹனிமூன்னு போவர் அங்கு அவருக்கு நடந்தது ஹனிமூன்னா இல்லை சனிமூன்னா ....????

எதார்த்தமான ,இயல்பான நிகழ்வுகள் குடும்ப பின்னணிகள் என்று அனைத்தையும் நம் கண் முன்னால் கொண்டு வருகிறார் நமது எழுத்தாளர் ...

உங்கள் கருத்துக்களை பகிர :
சுதா ரவி :

குடும்ப நாவல்கள் :

சிறகுகள் பதிப்பகம் :