அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்

ஆசிரியர்: எம்.ஜி.சுரேஷ்

Category நாவல்கள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 496
ISBN978-81-7720-173-4
Weight300 grams
₹225.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்த நாவலின் கதாநாயகன் அலெக்ஸாண்டர் புலம்பெயர்ந்தே தன் வாழ்க்கையைக் கழித்தவன். இதனால் இருத்தலின் நிச்சயமின்மை அவன் மனத்தின் சமனிலையை எந்த நேரமும் குலைக்கத் தயாராக இருக்கிறது. விதி அவன்காதுகளைப் பிடித்து இழுத்து எல்லாக் காலங்களுக்கும் கொண்டு போகிறது. அந்தக் காலங்களினூடான பயணத்தில் இவன் தன்னைப் பல அலெக்ஸாண்டர்களாகப் பெருக்கிக் கொள்கிறான். அவனுக்கேற்ப இந்த நாவலும் தன்னை ஏக காலத்தில் ஒரு சரித்திர நாவலாக, சமூக நாவலாக, துப்பறியும்
நாவலாகப் பல வகைமைகளில் தன்னைப் பெருக்கிக் கொள்கிறது. மூர்க்கத்தனமான கடந்தகாலத்தின் நீட்சியாக,
குரூரமான நிகழ்காலம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்காலத்தின் நீட்சியாக வரவிருக்கும் எதிர்காலம் எத்தகைய விபரீத சாத்தியங்களை முன்வைக்க இருக்கிறது என்பதையும் எல்லா அலெக்ஸாண்டர்களும் ஒரே அலெக்ஸாண்டரே என்பதையும் இறுதியில் அறிய நேரும் வாசகனை இநநாவல்திகைப்பில் ஆழ்த்துகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஜி.சுரேஷ் :

நாவல்கள் :

அடையாளம் பதிப்பகம் :