அறிவோமா அறிவியல் (கேள்வி பதில் தொகுப்பு)

ஆசிரியர்: த.வி.வெங்கடேஸ்வரன்

Category அறிவியல்
Publication தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
FormatPaperback
Pages 128
First EditionJan 2017
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹80.00 $3.5    You Save ₹8
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்த நுாலின் ஆசிரியர் த.வி. வெங்கடேஸ்வரன், டில்லியிலுள்ள மத்திய அரசின் தேசிய அறிவியல் பிரச்சார மையத்தில் முதுநிலை விஞ்ஞானியாக உள்ளார். சிறந்த அறிவியல் எழுத்தாளரான இவர், எண்ணற்ற அறிவியல் நுால்களைத் தமிழில் எழுதியுள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப், பணியாற்றி, மக்கள் மத்தியில் அறிவியல் பார்வையைக் கொண்டு சென்றவர். அறிவியல் கேள்வி பதில்கள், மனித குலத்தின் தோற்றம், நவீன அறிவியலின் வளர்ச்சி உள்ளிட்ட பல அறிவியல் நுால்களை வெளியிட்டுள்ளார். பல்துறை அறிஞராக இந்தியா முழுவதும் சென்று அறிவியல் பணியாற்றி வருகிறார்.

மனிதனின் இயற்கை இயல்புகளில் ஒன்று 'கேள்வி எழுப்புவது'. ஒரு குழந்தை முதலில் கேட்கும் கேள்வி “இது என்ன? என்பதுதான். மழலை பேசி வளரும் நிலையில்கூட, விரலை சுட்டி 'அது என்ன? இது என்ன?' என, நாம் சலிப்பு அடையும் வரை கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். 'என்னது' என்ற கேள்வி தான் மனிதன் கேட்கும் முதல் கேள்வி. அதற்கான பதில் கிடைத்த பின்னர், 'ஏன்'? என்னும் கேள்வியை அடுத்த கட்ட மனவளர்ச்சியில் கேட்க துவங்குகிறது குழந்தை. 'ஏன் தினமும் பால் குடிக்க வேண்டும்', 'ஏன் எண்ணெய் தேய்த்து, அதுவும் சனிக்கிழமை தான் தலை குளிக்க வேண்டும்' என கேள்வியாய் கேட்டுக் கொண்டே இருக்கும். மூன்றாவது நிலையில் தான் 'எப்படி' என்ற கேள்வி எழுகிறது. எப்படி பால் தயிராகிறது?'எப்படி நாம் சாப்பிடும் மருந்து நோய்ப்பட்ட உடல் பகுதிக்கு செல்கிறது? போன்ற கேள்விகள் குறிப்பிட்ட மனவளர்ச்சியில் ஏற்படுகிறது. ஆனால், சில பெரியவர்களால் இதற்கு பதில் சொல்ல தெரியாததால், குழந்தையின் தேடல் மனப்பான்மை தடுக்கப்பட்டு விடுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
த.வி.வெங்கடேஸ்வரன் :

அறிவியல் :

தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் :